கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
சிட்டு என்ற அருமையான போராளிப் பாடகனை அறிமுகப்படுத்திய பாடலிது. அதன்பின் ஏறத்தாழ 75 பாடல்களைப் பாடியிருக்கிறார் சிட்டு. 01.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினருக்கெதிரான மூன்றாவது வலிந்த தாக்குதலான ஓமந்தைப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவடைந்துவிட்டார் மேஜர் சிட்டு. பாடலை எழுதியது இன்னொரு போராளிக்கலைஞன் மேஜர் செங்கதிர். மேஜர் சிட்டு வீரச்சாவடைந்த இந்நாளில் இப்பாடலைப் பதிவாக்குவது சிறப்பே. கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள் உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள் மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம் கண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரே எண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காது என்னவளம் இல்லை தமிழீழமதில் ஏனஞ்சி வாழவேணும் சிங்களத்தில் ஒன்றுபடு தமிழினமே போரிட நீ -இனி ஓடட்டும் எதிரிபடை மண்ணை விட்டு ============================= பாடியவர்: மேஜர் சிட்டு பாடல் வரிகள்: மேஜர் செங்கதிர் இசைத்தட்டு: புதியதோர் புறம். |