Thursday, July 12, 2007

புதிய வரலாறு எழுதும்....

10/07/2007 அன்று விடுதலைப்புலிகளின் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலதின் பதினேழாவது வருட நினைவுநாள்.
10/07/1990 அன்றுதான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல் நடப்பதற்கு சரியாக ஒருமாதத்தின் முன்புதான் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது.

கரும்புலித் தாக்குதல் வடிவம் 1987 ஆம் ஆண்டு ஜூலைமாதம் ஐந்தாம்நாள் கரும்புலி கப்டன் மில்லரினால் நெல்லியடியில் தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வடிவம் பிறகு கடலிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

வடமராட்சிக் கடலில் தரித்துநின்ற கட்டளைக் கப்பலொன்றின்மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல் இங்குப் பதிவாக்கப்படுகிறது.
பாடியவர்: பார்வதி சிவபாதம்.
இசை: கண்ணன்.


Get this widget | Share | Track details

No comments:

Post a Comment