திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்
வணக்கம்!கோண மலையாள வேண்டும். - அந்தக் ஈழப்பாடல்களில் முதலாவதாக வரும் பாடலிது. முதலாவதாக எதைத்தரலாமென்று யோசித்ததில், தலைநகரிலிருந்தே தொடங்குவோமென்று பட்டது. **என் அலட்டல்கள் தேவையில்லாதவர்கள் நேரடியாக கீழே சென்று பாடலின் ஒலிவடிவத்தைக் கேட்டுச் செல்லவும்;-). பாடல்வரிகளையும் கீழே தந்திருக்கிறேன். 'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான். பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது. யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது. 'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன். புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது. அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது. "வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?" "ஆள் இப்ப தலைநகரில" என்ற உரையாடல்களைக் கேட்க முடியும். திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது. ****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா? அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா? திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா? புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன? போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ***** இதோ, தலைநகர் மீதொரு பாடல். பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன். கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள். (சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.) பாடலைப் பாடியவர் எல்லோரினதும அபிமானத்துக்குரிய மாவீரர் மேஜர் சிட்டு. எழுதியது யார்? புதுவைதானே? இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்" இசை: தமிழீழ இசைக்குழு. ********************************
|
Comments on "திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்"
எழுதிக்கொள்வது: siva
நல்ல முயற்சி.
நல்ல பாட்டு.
இன்னும் பாடல்களை எதிர்பார்க்கிறோம்.
23.45 22.3.2006
எழுதிக்கொள்வது: செல்வன்
பக்கத்தை திறக்கும்போதே பாட்டும் தொடங்குது. அதை நிப்பாட்டிவிட முடியாதா? வாசிக்க குழப்பமாயிருக்கு.
2.1 23.3.2006
எழுதிக்கொள்வது: மலைநாடான்
வன்னியன்!
ஈழத்தமிழர்களின் தலைநகர் என்பதையும் கடந்துஇ தருகோணமலை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிலம் விரைவில் உங்கள் கேள்விகளுக்கான பதில்களையும் உள்ளடக்கிய ஒரு பதிவைத் தர விரும்புகின்றேன். பார்ப்போ
17.28 22.3.2006
எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்
வன்னியன் எங்கள் இசையையும், விடுதலைகீதங்களியும் பலருக்கும் அறிமுகப்படுத்தும் நல்ல முயற்சி. உங்கள் இரண்டு பதிவுகளுக்கும் இங்கே பின்னூட்டம் இடுகிறேன்.
நமது விடலை பருவமும் விடுதலைகீதங்களோடே . அப்போது அடிக்கடி நடைபெறும் இசை நிகழச்சிகளுக்கு மேலும் பாடல்களை பிரபலப்படுத்தின.
17.47 22.3.2006
எழுதிக்கொள்வது: karikaalan
சிறப்பான முயற்சி.வாழ்த்துக்கள்.தொடர்ந்து நல்ல
பாடல்களை தாருங்கள்.
:-கரிகாலன்.
12.23 22.3.2006
சிவா,
செல்வன்,
வருகைக்கு நன்றி.
மலைநாடான்,
நீங்கள் யாரென்று தெரியவில்லை. வலைப்பதிவு வைத்திருப்பதாகவும் தெரியவில்லை.
உங்கள் விரிவான பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்.
வன்னியன்!
புலம்பெயர்ந்து முகவரி இழந்த பல்லாயிரம் ஈழத்தமிழர்களில் நானுமொருவன். மிக அண்மைக்காலமாகவே தமிழ்மணத்தில் வலைப்பதிவு செய்கின்றேன். தமிழ்மணத்திற்கும், வலைப்பதிவுக்கும் நான் புதியவன்.திருகோணமலை பற்றிய பதிவினை எழுதத் தொடங்கிவிட்டேன். கீழுள்ள சுட்டியில்அதைப்பார்க்கலாம்.
நன்றி!
http://malainaadaan.blogspot.com/2006/03/1.html
மலைநாடான்,
உங்கள் பதிவு பார்த்தேன்.
நல்ல முயற்சி.
தொடர்ந்து எழுதுங்கள்..
குழைக்காட்டான்,
கரிகாலன்,
உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.