டப்பாங்கூத்துப் பாடல்கள்
ஜெயசிக்குறு தொடங்கப்பட்டதின் பின்பு வன்னியில் தெருக்கூத்து அல்லது வீதிநாடகங்கள் எனப்படும் கலை மிகப்பரந்தளவில் எழுச்சி பெற்றது. புலிகளின் மிகமுக்கிய பரப்புரை ஊடகமாக அது இருந்தது. மக்கள் கலைஞர்களாலும், போராளிக் கலைஞர்களாலும் இவை அரங்கேற்றப்பட்டன. ஒலிபெருக்கிகள் ஏதுமின்றி நேரடியாகவே மக்களுடன் பேசும் நாடகங்கள் இவை. இவ்வாறான வீதி நாடகங்களின் போது சில பாடல்கள் பாடப்பட்டன. அவைகள் பின் ஒலித்தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன. அப்படி வந்த பாடல்களில் ஒன்றை இப்போது கேளுங்கள். "டப்பாங்கூத்து பாட்டுத்தான்" இப்பாடலைப் பாடியவர் 'குட்டிக்கண்ணன்' என்ற இளங்கலைஞர். அப்போது பத்தோ பதினொன்றோ தான் அவரது வயது.வன்னியெங்கும் சுழன்று திரிந்து பாடல்களைப் பாடுவார். நல்ல குரல் வளமுடையவர். டப்பாங்கூத்துப் பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது டப்பாங்கூத்துப் பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பாரு குட்டிக்கண்ணன் றோட்டில வந்து நிண்டு பாட்டில -(2) நாட்டுக்காக செய்தியொன்று சொல்லிறன் தெருக்கூத்தில -(2) நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம் சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே -(2) இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க -(2) இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள் நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும் அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும் -(2) இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு ************** இப்பதிவும் பாடலும் நட்சத்திரக் கிழமையின் போது 'பூராயத்தில்' இடப்பட்டவை. பாடல்களுக்கென்று தனிப்பக்கமாக இத இருப்பதால் இங்கு அப்பதிவு மாற்றப்படுகிறது. Labels: குட்டிக்கண்ணன், துள்ளிசை |
Comments on "டப்பாங்கூத்துப் பாடல்கள்"
Good work.
Keep it up.
Seelan.
குட்டிக்கண்ணனின் " ஆண்டாண்டு காலமதாய்" பாடலும் அருமை.
எழுதிக்கொள்வது: CHINNAPILLAI
அப்படி போடு போடு போடு, டப்பாங்குத்துதானே.
நல்ல தொகுப்பைய்
22.34 8.5.2006
வருகை தந்த பெயரில்லாதவர், கானா பிரபா, சின்னப்பிள்ளை ஆகியோருக்கு நன்றி.
கானா பிரபா,
ஆம் அந்தப்பாட்டும் அருமை. கிடைத்தால் அதையும் பதிவாக இடுவேன்.