மாமலையொன்று மண்ணிலேஇன்று - கேணல் சங்கர்
26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல். பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள். மாமலையொன்று மண்ணிலே இன்று சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு சேதனை தாண்டி வந்தாடிய வானர காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர் சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின் தலைவனை தாங்கிய தோழன் முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள் முதலோனின் நிழலாகி உறவாடினாய் விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன் விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய் விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள் தலைவனுக் குயிர் எனும் உறவு பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த புயலுக்கும் அசையாத மலையாகினாய் பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான் படையேறும் கனவோடு உயிர் போக்கினாய் அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ அதன்மேலே போட்டானே நெருப்பு அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம் அதிகாலை எனவாகும் பொழுதாகினாய் ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ் உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய் நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை நெருப்பினில் பகைவிழும் உறுதி _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: அக்கினிச் சுடர்கள், நினைவுப்பாடல், மாவீரர் |
Comments on "மாமலையொன்று மண்ணிலேஇன்று - கேணல் சங்கர்"