Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Friday, January 26, 2007

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

ஈழப்போராட்டத்தில் "மறைமுகக் கரும்புலிகள்" என்றொரு சொற்பதமுண்டு. தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பேரால் அழைக்கப்படுவர்.
இதென்ன மறைமுகக் கரும்புலி?

வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும்.
பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர்.
அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.

ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா.
கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.

இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம்.
போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள்.
தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு.
இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய நாளில் இவர்கள் பற்றிய பாடலொன்றைப் பதிவாக்குவது பொருத்தமானதும்கூட.
கல்லறைகள் காணாது
கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள்
வாய்கள் சொல்லவில்லை


(பாடல் வரிகளை முற்றுமுழுதாகச் சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.)









காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து
வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று
வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று
வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று


தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்
வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம்
வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி
நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை
விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை
சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள்
சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள்
வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை
காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள்
மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது
வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த
செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு
வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று


இவர்கள் தொடர்புடைய இன்னொரு பாடலுக்கான இணைப்பு:

வேர்கள் வெளியில் தெரிவதில்லை

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, December 21, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-3

நித்திய வாழ்வில்....

அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன்.
இது வன்னியிலிருந்து வெளிவந்த பாடல்.

பாடலை எழுதியவர் புதுவை இரத்தினதுரை.
பாடியவர் சாந்தன்.





_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, December 19, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-2

உந்தன் வரவையெண்ணி...

அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன்.
இசையமைத்துப் பாடியவர் வர்ண.இராமேஸ்வரன்.





_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Sunday, December 17, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-1

எங்கே சென்றீர்?

அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' பாலா அண்ணையை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலை இங்குப் பதிகிறேன்.

பாடியவர்: வர்ண.இராமேஸ்வரன்.





_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, November 16, 2006

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலிது.
பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடல் அருமையாகப் பாடப்பட்டுள்ளது.
'சோகப் பாடல்களுக்கென்றால் சிட்டு தான்' என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேருன்ற இப்படியான பாடல்கள் காரணமாக அமைந்துவிட்டன.






மேற்படி செயலிகள் தொழிற்படாவிட்டால் நேரடியாக கீழுள்ள இணைப்பை அழுத்திக் கேளுங்கள்.

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

_________________________________________

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர்விளங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

நாகதேவன்துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகிவரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, October 06, 2006

நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக

05.10.1987 அன்று இந்திய அரசாற் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட இன்னொரு பாடல் இது.

தேனிசைச் செல்லப்பாவின் குரலுக்கு இருக்கும் தனித்துவம் இப்பாடலிலும் வெளிப்படுகிறது.
இவரின் குரலில் இப்பாடல் இனம்புரியாத ஓர் உணர்வைத் தருகிறது.
மிக எளிமையான, உணர்வான இசையமைப்பு.

பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள்









நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார் -(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே


தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, October 05, 2006

தீயினில் எரியாத தீபங்களே

இன்று (05.10.2006) குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சம்பவத்தின் பத்தொன்பதாம் நினைவுநாள்.

தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் கைது செய்ப்பட்ட இவர்கள் சிறிலங்கா அரசதரப்பிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.
____________________






காற்றும் ஒருகணம் வீச மறந்தது
கடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்தது
தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது
தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே
மண்ணினில் விதையான முத்துக்களே -நாம்
மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்


கடலினில் கடல்புறா பயணங்கள் போனது
சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது
குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்
கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்
இளமையில் சருகாகிக் போனவரே -எம்
இதயத்தில் உருவான கோவில்களே

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்
அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்
ஆகிய வேங்கைள் அனலிடை போயினர்
காவிய நாயகர் களப்பலி ஆகினர்
மக்களுக்காக கடல் சென்றீரே -மண
மாலைகள் வாட முன்னர் போனீரே

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது
எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது
இந்திய அரசது ஏன்துணை போனது
இடியுடன் பெருமழை ஏன் உருவானது
கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் -நீர்
காட்டிய பாதையிலே செல்கின்றோம்




தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Saturday, September 30, 2006

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து -கேணல் சங்கர்

கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2

26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.

பாடியவர்: வசிகரன்
ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.





வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து
வாசலில் வெடித்த கொடுமையென்ன?
அஞ்சுபேர் உன்னுடன் நின்மனையில்
ஆகுதியான சோகமென்ன?


சங்கம் முழங்கிய திருவாயெங்கே -கேணல்
சங்கர் எனும் எம் சமர்ப்புலி எங்கே
தங்கத் தலைவன் தனிப்பலம் எங்கே -ஈழ
தமிழாள் ஈன்ற தவப்பயன் எங்கே


தலைமகன் நெஞ்சம் தவித்திடுதே -ஈழ
தமிழர்கள் நெஞ்சம் பதைத்திடுதே
அலையென திரண்டோம் மாவீரா -கண்கள்
அஞ்சலி பூவாய் மலர்ந்திடுதே

ஒருகணம் நினைந்தே உருகுகின்றோம் -உம்மை
மறுகணம் நினைத்து பொருமுகின்றோம்
கருவினில் வீரம் படைத்தவனே -உம்
கடமையை முடிக்க திரளுகின்றோம்

வஞ்சகர் வஞ்சனை வெல்லாது -நின்
வழிவரும் வரிப்புலி நில்லாது
வெஞ்சமர் களத்தில் வெற்றிபெறும் -உம்
வேள்விக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்
___________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, September 27, 2006

மாமலையொன்று மண்ணிலேஇன்று - கேணல் சங்கர்

26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.





மாமலையொன்று மண்ணிலே இன்று
சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு
தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு
வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு

சேதனை தாண்டி வந்தாடிய வானர
காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்
சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்
தலைவனை தாங்கிய தோழன்

முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்
முதலோனின் நிழலாகி உறவாடினாய்
விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்
விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்
விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்
தலைவனுக் குயிர் எனும் உறவு

பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த
புயலுக்கும் அசையாத மலையாகினாய்
பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்
படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்
அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ
அதன்மேலே போட்டானே நெருப்பு

அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்
அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்
ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்
உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்
நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை
நெருப்பினில் பகைவிழும் உறுதி

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, September 26, 2006

12 நாளாய் பசிகிடந்தான்:- திலீபன் நினைவுப்பாடல் -10

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க


_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



வந்தபடை வாழ்வளிக்கும்:- திலீபன் நினைவுப்பாடல் -9

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை:
திலீபன் கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, September 25, 2006

ஊரெழுவில் பூத்தகொடி:- திலீபன் நினைவுப்பாடல் -7

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Sunday, September 24, 2006

நெஞ்சினைப் பிழிந்துருகும்:- திலீபன் நினைவுப்பாடல் -5

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க


_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



நல்லைநகர் வீதியிலே:- திலீபன் நினைவுப்பாடல் -6

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கீதாஞ்சலி.





தரவிறக்க

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Saturday, September 23, 2006

குருதி சொரிந்து கடல் சிவந்தது

கரும்புலிகள் நினைவுப்பாடல்.

19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் "சாகரவர்த்தனா" என்ற கட்டளைக் கப்பல் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
இத்தாக்குதலில் நளாயினி, மங்கை, வாமன், லக்ஸ்மன் ஆகிய நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
இத்தாக்குதலின் போது அக்கப்பல் முற்றாக மூழ்கடிக்கபட்டது. அக்கப்பலின் கப்டன் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
நீண்டகாலத்தின்பின் சில வருடங்களின் முன் புலிகளால் விடுவிக்கப்பட்டார்.

அக்கடற்கரும்புலிகள் நினைவான வெளியிடப்பட்ட பாடல் இது.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கடற்கரும்புலிகள் -1.





குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே
குயில்கள் பர்டும் இராகம் யாவும் சோகமானதே
எரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன்
எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்

தங்கை நளாயினி போனாள் -எங்கள்
தம்பிகள் வாமனும் இலக்மனும் போனார்
மங்கையும் கூடவே போனாள் - இந்து
மாகடல் மீதினில் தீயெனவானாள்.


கடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர்
கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர்
படங்களாகி சுவர்கள் யாவும் உயர்ந்து சிரிக்கும் வீரரே
பகைவன் ஏறும் பெரிய கலத்தை எரித்து முடித்த தீரரே


அலைகள்அசையும் வகையில்பகையை முடித்த வீரப்பெண்களே
மகளிர்படையின் வலிமைஉலகில் தெரிய விழித்த கண்களே
அலைகள் மீதில் உலவும் பகையை அடித்த கரிய வேங்கைகள்
அவர்கள்தலைவன் ஒருவன்தலையைப் பிடித்து வந்த தங்கைகள்


உலகமெங்கும் திரியும் காற்றில் உமது மூச்சும் கலந்திடும்
உரிமைகேட்டு நிமிரும்போதில் உமது தீரம் விளங்கிடும்
தலைவன்காட்டும் வழியில்புலிகள் பகையை வென்று திரும்பிடும்
தமிழர்தேசம் உமதுபெயரை தினமும் பாடி வணங்கிடும்

தரவிறக்க


_____________________________________________

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



நல்லூரின் வீதியெங்கும்:- திலீபன் நினைவுப்பாடல் -4





தரவிறக்க


_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, September 22, 2006

சத்தியப் போரது:- திலீபன் நினைவுப்பாடல் -3

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: திலீபன் கீதாஞ்சலி.





____________________________
பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, September 21, 2006

வாயிலொரு நீத்துளியும்:- திலீபன் நினைவுப்பாடல் -2

வர்ண இராமேஸ்வரனின் குரல்வளத்தில் இன்னொரு பாடல்.
தியாகி திலீபனுக்காக அவர் பாடிய பாடலிது.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: திலீபன் கீதாஞ்சலி.





____________________________________
பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, September 19, 2006

மலர்தூவ வாருங்கள்:- திலீபன் நினைவுப்பாடல் -1

நாளுக்கொரு பாடல் தர நினைத்திருந்தாலும் முடியாமற் போய்விட்டது.
இனி தொடர்ந்து வரும்.





பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: திலீபன் கீதாஞ்சலி.

பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, August 01, 2006

விழியில் சொரியும் அருவிகள்

1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம்.
பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர்.
அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.

திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது.
அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான
மேஜர் தணிகைமாறன்,
மேஜர் கதிரவன்,
மேஜர் மதுசா,
கப்டன் சாந்தா.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது.
மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில் இப்பாடல் வெளிவந்துள்ளது.

விழியில்_சொரியும்...






விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
பகைவன் கப்பலை முடித்தனர் -திரு
மலையில் வெடியாய் வெடித்தனர்.
தம்பி கதிரவன் எங்கே
தணிகை மாறனும் எங்கே
மதுசாவும் எங்கே
தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்
தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்
ஏறி நடந்தவரே -உங்கள்
ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக
கொடுத்தவரே
தமிழ் ஈழம் உமை மறக்காது
பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை
தீயில் எரித்துவிட்டீரே -அவன்
ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே
ஈழம் மலர வைத்தீரே
வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள்
வாசலில் துயர்க் கோலங்கள்
___________________________

பாடலைத் தரவிறக்க

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________