Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Sunday, November 26, 2006

சூரியதேவனின் வேருகளே - மாவீரர்நாட் பாடல்

இன்று தமிழீழ மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூரும் நாள்.
அவர்கள் நினைவாக ஒருபாடல் 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் இடம்பெறுகிறது.

இப்பாடல், ஒவ்வொரு வித்துடல் விதைப்பின்போதும் ஒலிக்கவிடப்படும்.
வித்துடலோ, நினைவுப்படமோ வீட்டிலிருந்து துயிலுமில்லம் எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒலிக்கவிடப்படும்.
பின் இறுதி மலர்வணக்கம் நடைபெறும்போதும் விதைகுழியில் விதைக்கப்படும்போதும் இப்பாடல்தான் ஒலிக்கவிடப்படும்.

இப்பாடலை அச்சந்தர்ப்பங்களில் கேட்காதவர்களுக்கு இப்போது எவ்வகை உணர்வு வருமென்று தெரியவில்லை. ஆனால் வித்துடல் விதைப்பு நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுத்த அனுபவமுள்ளவர்களுக்கு இப்போது கேட்டாலும் இப்பாடல் மிகுந்த உணர்வுப்பெருக்கைத் தரக்கூடியது.
சாதாரண நேரங்களில் பத்தோடு பதினொன்றாக இப்பாடலைக் கேட்கும் துணிவு எனக்கில்லை. பாடலின் இசை கேட்டாலே பங்குகொண்ட சில நூறு வித்துடல் விதைப்புக்களும் விதைக்கப்பட்டவர்களும்தாம் ஞாபகம் வருகிறார்கள்.

இசை: முரளி
பாடியவர்கள்: சாந்தன், சுகுமார் உட்பட பலர்.






சூரியதேவனின் வேருகளே
ஆயிரம் பூக்களை சூடுகிறோம்
போரினில் ஆடிய வேருகளே -விட்டு
போகின்ற நேரத்தில் பாடுகின்றோம்
போரினில் ஆடிய வேருகளே -விட்டு
போகின்ற நேரத்தில் பாடுகின்றோம்

மடியில் மலர்ந்த மகளே -எங்கள்
குடியில் மலர்ந்த மகனே
விடியும் பொழுதின் கதிரே -புலி
கொடியில் உலவும் உயிரே

கண்களில் நீர்வழிந்து ஓடிடஓடிய
கைகளினால் மலர் சூடுகின்றோம்
காலெடுத்தாடிய தாயகப்பூமியை
காதலித்தீர் உம்மைப் பாடுகின்றோம்

மண்மடி மீதிலே தூங்கிடும் போதிலே
மாலையிட்டோம் உங்கள் தோள்களிலே
மாதவம் செய்த எம் பிள்ளைகளே -நாங்கள்
மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே

செங்கனி வாய்திறந்து ஓர்மொழி பேசியே
சின்னச் சிரிப்பு ஒன்றை சிந்துங்களே
தேச விடுதலையை தோளில் சுமந்த எங்கள்
செல்வங்களே ஏதும் சொல்லுங்களே

வந்துநின்றாடிய சிங்களச் சேனையை
வாசல்வரை சென்று வென்றவரே
வாழும்வரையும் உங்கள் பாதையிலே செல்லும்
வல்லமை தாருங்கள் கன்றுகளே

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Saturday, November 25, 2006

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே - பிறந்தநாளுக்காக

தலைவனின் 52 ஆம் பிறந்தநாளுக்காக 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் இப்பாடல் இடம்பெறுகிறது.

பாடலை எழுதியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: ஜெயச்சந்திரன்
இசை: தேவேந்திரன்.

பொங்கிடும்_கடற்கர...






தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, November 24, 2006

எங்கள் தோழர்களின் புதைகுழியில்...

தமிழீழ மாவீரர்நாள் நெருங்கிவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விடுதலைப் போராட்டத்தில் தமது உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் இக்காலத்தில் பொருத்தமான பாடலொன்று இது.

'புயற்கால இராகங்கள்' என்ற இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் இது.





எங்கள் தோழர்களின் புதைகுழியில்
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
ஈழம் மீட்பது உறுதி

இளமைநாளின் கனவையெல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்
கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்

வாழும்நாளில் எங்கள் தோழர்
வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்
தோழர் நினைவில் மீண்டும் தோளில்
துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

தாவிப்பாயும் புலிகள்நாங்கள்
சாவைக்கண்டு பறப்போமா?
பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போனவழியை மறப்போமா?

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, November 16, 2006

அப்புகாமி பெற்றெடுத்த - துள்ளிசைப்பாடல்

அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி
அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி


என்று தொடங்கும் துள்ளிசைப் பாடலொன்று பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான வெற்றிக்காகப் பாடப்பட்டது.

இலங்கையில் பொப்பிசை மீது எப்போதும் ஒரு கிறக்கம் அனைவருக்குமுண்டு.
அதேசாயலில் விடுதலைப்போராட்டப் பாடல்கள் சிலவும் பரீட்சிக்கப்பட்டன.
அவற்றில் முதலாவதாக வெளிவந்த பாடலென்று இதைச் சொல்லலாம்.
கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த வர்ண. இராமேஸ்வரன்தான் இப்பாடலைப் பாடியவர் என்பது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம்.

இப்பாடல் அப்போது மிகப்பிரபலமாக இருந்தது. இவ்வெற்றியைத் தொடர்ந்து அவ்வப்போது இச்சாயலில் பாடல்கள் சோதனை முயற்சியாக வெளிவந்தன. இரண்டாவதாக வெளிவந்தது, புலிப்பாய்ச்சல் வெற்றிக்காக லோறன்ஸ் பாடிய 'முன்னேறிப் பாய்வதென்ன அம்மா?' என்று நினைக்கிறேன். பின் நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து ஜெயசிக்குறு காலத்தில் ஒரு இசைத்தொகுதியே இவ்வகை இசையில் வெளியிட்டார்கள். மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள். போராளிக் கலைஞர்களைக் கொண்டு உருவாகிய அத்தொகுப்புக்கான உழைப்பில் இப்போதைய விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையனின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகம் கதைக்காமல் பாடலுக்குச் செல்வோம்.





பாடலைக் கேட்க முடியாதவர்கள் கீழ்கண்ட இணைப்பை அழுத்திக் கேட்கவும்.

அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலிது.
பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடல் அருமையாகப் பாடப்பட்டுள்ளது.
'சோகப் பாடல்களுக்கென்றால் சிட்டு தான்' என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேருன்ற இப்படியான பாடல்கள் காரணமாக அமைந்துவிட்டன.






மேற்படி செயலிகள் தொழிற்படாவிட்டால் நேரடியாக கீழுள்ள இணைப்பை அழுத்திக் கேளுங்கள்.

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

_________________________________________

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர்விளங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

நாகதேவன்துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகிவரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, November 14, 2006

சங்கு முழங்கடா தமிழா

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தமிழர்படையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்த பாடலிது. அவ்வெற்றிநாளின் பதின்மூன்றாண்டுகள் நிறைவில் இப்பாடலை இங்குப் பதிவாக்குகிறேன்.
பூநகரி வெற்றி பற்றி எழுதப்பட்ட பதிவு: தவளைப் பாய்ச்சல்.


பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: பூநகரி நாயகர்
பாடியவர்கள்: சாந்தன், மற்றவர் யாரென்று தெரியவில்லை.

*******************************






சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே
பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா

நாகதேவன்துறை வேகப்படகுகள்
நம்கையில் வந்ததடா -பகை
ஏவியபீரங்கி யாவுமே எங்களின்
காலிற் கிடக்குதடா -அட
பாயும் புலிகளின் கையில் எதிரியின்
பாசறை வீழ்ந்ததடா -காற்றில்
பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது
வந்த படைகளடா.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________