எங்கள் தோழர்களின் புதைகுழியில்...
தமிழீழ மாவீரர்நாள் நெருங்கிவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விடுதலைப் போராட்டத்தில் தமது உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் இக்காலத்தில் பொருத்தமான பாடலொன்று இது. 'புயற்கால இராகங்கள்' என்ற இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் இது. எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி -தமிழ் ஈழம் மீட்பது உறுதி இளமைநாளின் கனவையெல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள் போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள் வாழும்நாளில் எங்கள் தோழர் வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம் தோழர் நினைவில் மீண்டும் தோளில் துப்பாக்கிகளை அணைக்கின்றோம் தாவிப்பாயும் புலிகள்நாங்கள் சாவைக்கண்டு பறப்போமா? பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள் போனவழியை மறப்போமா? _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: செல்லப்பா, தமிழகக் கலைஞர்கள், மாவீரர் |
Comments on "எங்கள் தோழர்களின் புதைகுழியில்..."