நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக
05.10.1987 அன்று இந்திய அரசாற் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட இன்னொரு பாடல் இது. தேனிசைச் செல்லப்பாவின் குரலுக்கு இருக்கும் தனித்துவம் இப்பாடலிலும் வெளிப்படுகிறது. இவரின் குரலில் இப்பாடல் இனம்புரியாத ஓர் உணர்வைத் தருகிறது. மிக எளிமையான, உணர்வான இசையமைப்பு. பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள் நெஞ்சம் மறக்குமா? நெஞ்சம் மறக்குமா? நெஞ்சம் மறக்குமா? வல்வெட்டித்துறையில் நாங்கள் வளர்த்த சிதை நெருப்பில் பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப் படுத்ததை நெஞ்சம் மறக்குமா? படுத்ததை நெஞ்சம் மறக்குமா? குமரப்பா புலேந்தி அப்துல்லா ரகு நளன் பழனி மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார் அன்பழகன் கரன் ஆனந்தகுமார் -(2) எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள் இவர்களல்லவா"? கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட கதையைச் சொல்லவா? தங்கத் தமிழீழ விடுதலை காண நெஞ்சம் துடித்தாரே சிங்கள இந்திய அரசுகள் சதியால் நஞ்சு குடித்தாரே ஈழத்தமிழன் தமிழீழக் கடலில் போனால் பிடிப்பாராம் இந்திய உதவி கொண்டே தமிழனின் வாழ்வை முடிப்பாராம் ஆழக்கடலில் போனபுலிகளை பிடித்துச் சென்றாரே அழகும் இளமையும் பொங்கும் வயதில் துடிக்கக் கொன்றாரே ஆழக்கடலில் போனபுலிகளை பிடித்துச் சென்றாரே அழகும் இளமையும் பொங்கும் வயதில் துடிக்கக் கொன்றாரே தரவிறக்க _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: செல்லப்பா, தமிழகக் கலைஞர்கள், நினைவுப்பாடல், மாவீரர் |
Comments on "நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக"
பாடலுக்கு நன்றி.
அருமையான குரல்.
வருகைக்கு நன்றி அனானி.
ஆம். அருமையான குரல்.
பல பாடல்களில் வரிகளைவிடவும் செல்லப்பாவின் குரலே உணர்வைக் குவிக்கும்.
எழுதிக்கொள்வது: யாரோ
http://oosi.blogspot.com/2006/11/jipmer.html
10.6 15.11.2006
எழுதிக்கொள்வது: sasi
வல்வடிதுரைஜ்ல் நான் வலத சிதை நருபில் 12 புலிகல் ஒனரை படுதை நஞம் மரகும
22.20 1.1.2007
எழுதிக்கொள்வது: sasi
thanks
22.25 1.1.2007
வன்னி,
பாடல்களுக்கு மிக்க நன்றி. 2005ம் ஆண்டு ஈழத்திற்குச் சென்றிருந்த போது வல்வெட்டித்துறைக்குச் சென்று தலைவரின் வீட்டைப் பார்க்கப் போயிருந்தேன். போகும் வழியில் வல்வெட்டித்துறையில் இப் பன்னிரு வேங்கைகளுக்கும் அமைக்கப்பட்ட நினைவுத் தூபிகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன். ஆனால் கடந்த வருடம் (2006ல்) தாயகம் சென்ற போது இங்கே எல்லாம் செல்ல முடியவில்லை.