அப்புகாமி பெற்றெடுத்த - துள்ளிசைப்பாடல்
அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி என்று தொடங்கும் துள்ளிசைப் பாடலொன்று பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான வெற்றிக்காகப் பாடப்பட்டது. இலங்கையில் பொப்பிசை மீது எப்போதும் ஒரு கிறக்கம் அனைவருக்குமுண்டு. அதேசாயலில் விடுதலைப்போராட்டப் பாடல்கள் சிலவும் பரீட்சிக்கப்பட்டன. அவற்றில் முதலாவதாக வெளிவந்த பாடலென்று இதைச் சொல்லலாம். கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த வர்ண. இராமேஸ்வரன்தான் இப்பாடலைப் பாடியவர் என்பது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். இப்பாடல் அப்போது மிகப்பிரபலமாக இருந்தது. இவ்வெற்றியைத் தொடர்ந்து அவ்வப்போது இச்சாயலில் பாடல்கள் சோதனை முயற்சியாக வெளிவந்தன. இரண்டாவதாக வெளிவந்தது, புலிப்பாய்ச்சல் வெற்றிக்காக லோறன்ஸ் பாடிய 'முன்னேறிப் பாய்வதென்ன அம்மா?' என்று நினைக்கிறேன். பின் நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து ஜெயசிக்குறு காலத்தில் ஒரு இசைத்தொகுதியே இவ்வகை இசையில் வெளியிட்டார்கள். மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள். போராளிக் கலைஞர்களைக் கொண்டு உருவாகிய அத்தொகுப்புக்கான உழைப்பில் இப்போதைய விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதிகம் கதைக்காமல் பாடலுக்குச் செல்வோம். |
Comments on "அப்புகாமி பெற்றெடுத்த - துள்ளிசைப்பாடல்"
நல்ல பாடல்.
இன்றுதான் கேட்டேன்.
மற்றப்பாட்டுக்களையும் வெளியிடுங்கள்.
அனானி வருகைக்கு நன்றி.
ஏனைய பாடல்கள் தற்போது என்னிடமில்லை. தேடிக்கிடைத்தால் தருகிறேன்.