விழியில் சொரியும் அருவிகள்
1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம். பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர். அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது. திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது. அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன், மேஜர் மதுசா, கப்டன் சாந்தா. இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது. மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில் இப்பாடல் வெளிவந்துள்ளது.
|
Comments on "விழியில் சொரியும் அருவிகள்"
பாடல் இறக்க உதவி செய்வீர்களா?
அன்பரே
இப்பாடலை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.freewebs.com/vanniyan/Songs/viliyilsoriyum.rm
மேலும் தேவையென்றால் என் முகவரிக்கு எந்தெந்தப்பாடல்கள் தேவையென்று ஒரு பின்னூட்டம் போடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் தந்தால் நன்று.