எந்த மாதிரி? அட அந்தமாதிரி
இது ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் வெளிவந்த பாடல். ஒருவித நையாண்டித்தன்மையோடு அமைந்த பாடல். சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவ்நத இன்னொரு வெற்றிப்பாடல். இவர்கள் இருவரின் கூட்டணியில் பல துள்ளிசைப்பாடல்கள் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றன. இருவரும் சிறந்த கூட்டாளிகளும்கூட. (ஈழப்போராட்டத்தில் இவர்கள் இருவரினதும் பங்கு மிகக்காத்திரமானது. தனியே பாடகர்கள் என்றில்லாது பல தளங்களிற் செயலாற்றியவர்கள்.) பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் புதுவை இரத்தினதுரை. இசையமைப்பு முரளி.
ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா எந்த மாதிரி அட அந்தமாதிரி எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ் ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ உள்ளதையும் தந்து போறா நந்தலாலா மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள் அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள் தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா ____________________________ பாடலைத் தரவிறக்க Labels: ஆனையிறவு, களவெற்றி, சாந்தன், சுகுமார், துள்ளிசை, புதுவை இரத்தினதுரை, முரளி |
Comments on "எந்த மாதிரி? அட அந்தமாதிரி"
நையாண்டித்தனமான இசை. நையாண்டித்தனமான குரல்கள், வரிகள்.
பாடல் நன்றாக இருக்கிறது.
எழுதிக்கொள்வது: thamilzmahal
நல்ல பாடல் தந்ததுக்கு நன்றி.குரல் பொருத்தம் அருமை.தொடருக.
23.29 26.6.2006