எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா
இது ஈழத்துப் புகழ்பெற்ற பாடகர் சாந்தன் பாடிய அருமையான பாடல். சாந்தனின் தொடக்க காலப் பாடல்களிலொன்று. இப்படியான பாடல்கள் சாந்தனுக்குக் கைகூடி வரும். இசையும் நன்றாகவிருக்கிறது. இடையில் பழைய சினிமாப் படப் பாடல்போல ஒரு தோற்றம் வருகிறது. "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" பொதுவான வரிகள். எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா தமிழ்மக்கள் அறிவென்ன சாலமே குருடா தன்தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா தலைவனின் ஆணைகொள் புலியேநீ ஆளவா போடுபோடு வீரநடைபோடு வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2) ஆறிலும் சாவு நூறிலும் சாவு மானமிருந்தால் தானே வாழ்வு (2) சங்கத்தமிழ் கண்டோன் தமிழ்வீரன் அல்லனா இமையத்தில் புலிநட்டோன் தமிழ்வீரன் அல்லனா ஈழத்தை மீட்பவன் தமிழ்வீரன் அல்லனா இனிவேறு புறமொன்று நானிங்கு சொல்லவா போடுபோடு வீரநடைபோடு வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2) ஆறிலும் சாவு நூறிலும் சாவு மானமிருந்தால் தானே வாழ்வு (2) Labels: சாந்தன் |
Comments on "எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா"
நன்றி