எந்தையர் ஆண்டதின் நாடாகும்
புகழ் பெற்ற ஈழத்துப் பாடகர் சாந்தன் பாடிய பாடல். இவ்வகையான பாடல்களுக்கு சாந்தனின் குரல் அருமையாக ஒத்துவருகிறது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் வந்த பாடல்கள் வரிசையில் முக்கியமான பாடல். பாடல் வரிகள் யாரென்று சரியாகத தெரியவில்லை. வரிகளை வைத்துப் பார்க்கும்போது பண்டிகர் பரந்தாமன் அல்லது பஞ்சாட்சரமாக இருக்கலாம். எளிமையான இசை அருமையாக உள்ளது. இப்போது தான் பார்த்தேன். பாடல் இணைப்பு வேலை செய்யவில்லை. சரிப்படுத்துவரை கீழ்க்காணும் இணைப்பிற் சொடுக்கிப் பாடலைக் கேளுங்கள். இணைப்பு ஒன்று இணைப்பு இரண்டு இசைத்தட்டு: புதியதோர் புறம். ___________________________________ எந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை எதிரிகள் ஆள்வது கேடாகும் வந்துநீ களத்தினில் போராடு -அடிமை வாழ்விலும் சாவது மேலாகும் மீனினம் பாடிடும் தேனாடு -வரை விண்முட்டும் சீர்திரு மலைநாடு மானினம் வாழ்முல்லை வளக்காடு -வயல் வன்னியும் எங்களின் மண்ணாகும் முத்துக்கள் விளைகடல் மன்னாரும் -தம்பி முத்தமிழ் புலமைசேர் யாழ்நாடும் சொத்தென நிறைபுகழ் தமிழீழம் (2)-இதில் தொல்லைகள் மேவினால் என்னாகும் சிங்களர் காலடி படலாமோ -ஈழம் சீர்கெட தமிழர்கள் விடலாமோ சொந்த மண் அழிந்ததன் பின்னாலே(2) -பிறர் சோற்றுக்கு வாழ்வதோ வாழ்வாகும் கொலையோடு கொள்ளைகள் செய்வார்கள் -பெரும் குண்டினை மழையென பெய்வார்கள் தலையோடு மனைகளும் பாழாக(2) -தீயில் கருக்குவர் ஒவ்வொரு நாளாக தாயகம் மீட்டிட நீயோடு -பிரபா தானையில் சேர்ந்தொரு புலியாகு போயினி செருவினில் விளையாடு (2)-தமிழ் பூத்திட புதியதோர் புறம்பாடு புறம்பாடு.. புறம்பாடு.. புறம்பாடு.... Labels: சாந்தன் |
Comments on "எந்தையர் ஆண்டதின் நாடாகும்"
இப்போது செயலிக்கான இணைப்புக்கள் சரியாக வேலை செய்கின்றன.
எல்லா இணைப்பும் நன்றாக வேலை செய்கின்றன.
நீங்கள் சொன்னது போல சாந்தனுக்கு இம்மாதிரியான பாடல்கள் நன்றாகப் பொருந்தும்.
யாழ்ப்பாணத்தில் "அணலில் கருவாகி புனலில் உருவான கந்தனூர்" என்றபாடலை சாந்தன் மேடைகளில் பாடும்போது கேட்கும் சுகமே தனி.
இவற்றைவிட
"அதியாய் அநாதியாய்"
"பண்பாட்டுக்கிசைவாகப் பண்பாடு"
போன்ற பாடல்கள் இவ்வகைக்குள் அடங்குமென்று நினைக்கிறேன்.
நல்ல பணி தொடரவும்.
பெயரில்லாதவருக்கு நன்றி.
ஆம். யாழ்ப்பாணத்தில் கணலிற் கருவாகி பாடலை சாந்தனிடமிருந்து கேட்க அந்த மாதிரியிருக்கும்.
நீங்கள் கேட்ட மற்ற இருபாடல்களும் என்னிடமிருக்கின்றன. விரைவில் தருவேன்.