போரம்மா
இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். ஒருநேரத்தில் மிகப்பிரபலமானதாயிருந்தது. இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எல்லா இசையையும் பின்னுக்குத்தள்ளி உடுக்கின் ஒலி ஆவேசமான ஓருணர்வைத்தரும். சரியான பாடகர்களின் குரல்கூட அமுங்கிப்போனது போன்று சிலவேளை தோன்றும். இடமறிந்து இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் இன்னொரு பாரம்பரிய இசைக்கருவியான பறையும் புலிகளால் இசைப்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அது முக்கிய இசைக்கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பாடலை பிறகு தருகிறேன். இப்பாடலில் பார்வதி சிவபாதம் அவர்களின் குரலே மற்றைய குரல்களைவிட மேலோங்கியது போன்று எனக்குத் தோன்றுவதுண்டு. (சினிமாப்பாடல்களிலும், ஆண்-பெண் இருவரும் ஒரேநேரத்தில் பாடும்போது பெண்குரல் மற்றதை அமுக்குவதைப் பலமுறை அவதானித்திருக்கிறேன்). சரி. இனி பாடலுக்கு வருவோம். குறிப்பு: வன்முறை பிடிக்காதவர்கள் இப்பாடலைக் கேட்க வேண்டாம். தங்கள் குழந்தைகள் பாடல்களைக் கேட்டு துவக்குத் தூக்கிச் சண்டைபிடிப்பார்கள் என்று கருதும் பெற்றோர்கள் இப்பாடலை உங்கள் பிள்ளைகள் கேட்பதுக்கு அனுமதிக்க வேண்டாம்.;-). போரம்மா உனையன்றி யாரம்மா செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம் தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம் ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம் அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம் அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம் அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம் இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம் அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள் ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள் வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம் வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம் வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம் எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம் ****** மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு வீசும் காற்றின் வேகம் கொண்டு மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள் மண்ணில் வந்த வேங்கையம்மா அண்ணன்சொன்ன வேதம் கேட்டு விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள் ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள் ஆடும் கரும்புலிகளம்மா Labels: கரும்புலி, குமாரசாமி, துள்ளிசை, பார்வதி சிவபாதம், புதுவை இரத்தினதுரை |
Comments on "போரம்மா"
இதே மெட்டை ஞாபகப்படுத்தக்கூடிய இன்னொரு பாடல் "பொறிகக்கும் விழியோடு புறப்பட்டுவிட்டோம், போராட நாள் குறித்தோம்.
பாடல்வரிகள் வசீகரித்ததை விட, பாடியவர்களின் குரல்களும், பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களும் பிடித்திருந்தன. ஈழத்தில் இருந்தபோது பளையில் நடந்த முறியடிப்புச் சமர் (யாழ்தேவி?) வீடியோப் பிரதியிலும் இந்தப்பாடல் சேர்க்கப்பட்டு புலிகளின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பார்த்ததாய் நினைவு இருக்கின்றது.
போரம்மா
எனக்குப்பிடித்த ஈழவிடுதலைப்பாடல்களில் முக்கியமானதொன்று. பறையொலியும், உடுக்கொலியும், மனதுக்குள் தைரியத் தள்ளுணர்வை ஏற்படுத்தும் சக்தி மிக்கவை. ஆனால் எங்கள் நடைமுறை வாழ்வியலில், பறை துயரத்துக்கும், உடுக்கு பக்திக்குமாக மாறிவிட்டது. இப்பாடலில் எனக்குப் பிடித்தது உறுமும் அந்த உடுக்கொலியே. இப்பாடல் பற்றியும் பதிவிட எண்ணியிருந்தேன்.நீங்கள் முந்தி விட்டீர்கள் பறவாயில்லை. இன்னொருவகையில் பார்ப்பபோம்.
கானா பிரபா,
டி.சே,
மலைநாடான்,
வருகைக்கு நன்றி.
டி.சே, யாழ்தேவி முறியடிப்புச்சமர் பதிவில்தான் அதுவந்ததாக நானும் நினைக்கிறேன்.
மலைநாடான்,
அதுக்கென்ன நீங்கள் எழுதுங்கோட.
இந்தப்பதிவு வாசிச்சவர்கள் மொத்தம் இருபது பேர் கூட வராது. உங்கள் பதிவில் மேலதிகமாகவும் நிறையச் சொல்லலாம்.
எழுதிக்கொள்வது: kulakaddan
வன்னியன்...
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்....
நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு
19.21 3.6.2006
அந்த இருபதில் நானும் ஒன்று.
எழுதிக்கொள்வது: thuyawan
இந்தப் பாடல்லி உடுக்கொலி பற்றிப் சில உறவுகள் ஞாபகப்படுத்தி இருக்கின்றார்கள்! உண்மையில் எனக்கும் அந்த பாடல்வரிகளை கேட்கும்போது பரவசத்தை உண்டு பண்ணும்! அதுவும் பாடலின் இறுதிக் கட்டத்தில் முழங்கும் உடுக்கும்இ பறை ஒலியும் சேர்ந்து கக்கும் நாதம் என்பது அவை தமிழருக்கு உரித்தானவை என்ற பெருமிதத்தை உண்டு பண்ணும்!
9.27 4.6.2006