10/07/2007 அன்று விடுதலைப்புலிகளின் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலதின் பதினேழாவது வருட நினைவுநாள். 10/07/1990 அன்றுதான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் நடப்பதற்கு சரியாக ஒருமாதத்தின் முன்புதான் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது.
கரும்புலித் தாக்குதல் வடிவம் 1987 ஆம் ஆண்டு ஜூலைமாதம் ஐந்தாம்நாள் கரும்புலி கப்டன் மில்லரினால் நெல்லியடியில் தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வடிவம் பிறகு கடலிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வடமராட்சிக் கடலில் தரித்துநின்ற கட்டளைக் கப்பலொன்றின்மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல் இங்குப் பதிவாக்கப்படுகிறது. பாடியவர்: பார்வதி சிவபாதம். இசை: கண்ணன்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடத்திய காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகியோரையும், அதன்பின் வேறொரு தாக்குதலில் வீரச்சாவடைந்த சிதம்பரம், ஜெயந்தன் ஆகியோரையும் நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடல். நெய்தல் இசைநாடாவில் இடம்பெற்றது இப்பாடல்.
1991ஆம் ஆண்டு இன்றைய நாளில்தான் (10.07.1990) முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
காந்தரூபன் வாழுகின்ற கடலிது கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு விலையேது விலையேது
புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு -அவர் உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு
எதிரி வருவானா கரையைத் தொடுவானா என்று புயலாகி நின்றோம் -புலி அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும் அணியில் துணையாகி வென்றோம் உலகத் திசையாவும் தமிழன் அரசாளும் நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல் புலிகள் படைசென்று பகைவர் படைவென்று புலரும் தினமன்று திருநாள்
கடலின் கரையோரம் தலைவன் உருவாகி கால்கள் நடைபோட வந்தான் -பெரும் தடைகள் எதுவந்த போதும் அவன்காலில் உடையும் எனச்சொல்லி வென்றான் பூவும் புயலாகி பாயும் புலியாகி போரில் குதித்துள்ள நாடு -தமிழ் ஈழம் உருவாகும் வேளை இதுவாகும் என்று களம்நோக்கி ஓடு
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது -இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
வாழும்போது மானத்தோடு வாழ்பவன்தானே தமிழன் -தன் வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன் வழியில் இடறும் பகைகள் எரிய வருக வருக தமிழா -(2) உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து வெளியில் வருக தமிழா
காற்றும்நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -நாங்கள் போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள் முளைப்போம் இந்த மண்ணில் -(2) எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து மூட்டும் தீயைக் கண்ணில்
இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். ஒருநேரத்தில் மிகப்பிரபலமானதாயிருந்தது.
இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எல்லா இசையையும் பின்னுக்குத்தள்ளி உடுக்கின் ஒலி ஆவேசமான ஓருணர்வைத்தரும். சரியான பாடகர்களின் குரல்கூட அமுங்கிப்போனது போன்று சிலவேளை தோன்றும். இடமறிந்து இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் இன்னொரு பாரம்பரிய இசைக்கருவியான பறையும் புலிகளால் இசைப்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அது முக்கிய இசைக்கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பாடலை பிறகு தருகிறேன்.
இப்பாடலில் பார்வதி சிவபாதம் அவர்களின் குரலே மற்றைய குரல்களைவிட மேலோங்கியது போன்று எனக்குத் தோன்றுவதுண்டு. (சினிமாப்பாடல்களிலும், ஆண்-பெண் இருவரும் ஒரேநேரத்தில் பாடும்போது பெண்குரல் மற்றதை அமுக்குவதைப் பலமுறை அவதானித்திருக்கிறேன்).
சரி. இனி பாடலுக்கு வருவோம்.
குறிப்பு:வன்முறை பிடிக்காதவர்கள் இப்பாடலைக் கேட்க வேண்டாம். தங்கள் குழந்தைகள் பாடல்களைக் கேட்டு துவக்குத் தூக்கிச் சண்டைபிடிப்பார்கள் என்று கருதும் பெற்றோர்கள் இப்பாடலை உங்கள் பிள்ளைகள் கேட்பதுக்கு அனுமதிக்க வேண்டாம்.;-).
மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு வீசும் காற்றின் வேகம் கொண்டு மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள் மண்ணில் வந்த வேங்கையம்மா
அண்ணன்சொன்ன வேதம் கேட்டு விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள் ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள் ஆடும் கரும்புலிகளம்மா