போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா
பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல். என்னைக் கவர்ந்த பாடல்களில் இதுவுமொன்று. போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன் புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா? நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள் நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில் தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும் தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும் மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது. Labels: பார்வதி சிவபாதம் |
Comments on "போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா"
எனக்கு மிகப்பிடித்த வலைத்தளங்களுள் ஒன்றாக உங்கள் ஈழப்பாடல்கள் மாறிப்போய்விட்டது.
தொடர்ச்சியாக இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களிலேயே வாழ்ந்துவருவதால் விடுதலைப்புலிகளின் பாடல்கள் பலவற்றை கேட்க முடிந்ததில்லை.
உங்கள் மூலம் தான் அரிய பாடல்கள் பலவற்றை கேட்கிறேன்
மிகவும் நன்றி.
வெளிநாட்டு -குறிப்பாக தமிழ்நாட்டு பதிவர்களுக்கு தமிழீழ பாடல்களை கொண்டு சேர்க்க இது நல்ல கருவி.
தமிழ் நாட்டைச்சேர்ந்த பதிவர்கள் இப்பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லலாமே?
வன்னியன்
பாடலைக் கேட்கத் தந்ததற்கு நன்றி.
மயூரன், பின்னூட்டத்துக்கு நன்றி.
உங்கள் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் இரசனைக்காக நான் பதிவுகளுக்கிடையான இடைவெளியைக் குறைக்கிறேன்.
பதிவுக்கு வருபவர்கள் மிகச்சிலர்தான். அதுவும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே. ஏற்கனவே கேட்ட சிலர் மட்டுமே மீண்டும் கேட்கிறார்கள்.
இதையிட்டு ஏமாற்றம்கூட எனக்கில்லை. வன்னியன் என்ற பெயருக்கு இருக்கும் 'விம்பம்' எனக்கு நன்றாகத் தெரியும். இதைப்பற்றி மட்டும்தான் வன்னியன் எழுதுவார் என்பது எல்லார் மனத்திலும் ஏற்பட்டுவிட்டது. திரட்டியில் பெயரைப் பார்த்ததுமே விலகிவிடுவார்கள்.
ஒரு பரிசோதனையாக 'நட்சத்திர வாரம்' செய்திருந்தேன். அதைப்பார்த்தாலே நிறைய விளங்கும்.
ஒருநேரத்தில் 'ஒழுங்கை' பற்றிய குரற்பதிவொன்றை இட்டிருந்தேன். என் வழமையிலிருந்து விலகி வாசகர்களை ஈர்க்கவே அப்பதிவு போட்டதாக எனக்குப் பின்னர் தோன்றியது. 'பூராயம்' என்ற அருமையான பெயரை வைத்துவிட்டு உம்மாண்டியாகவே இருந்துவிட்டேன்.
இப்பாடல் வலைப்பதிவைத் தொடங்கும்போதே இதன் வாசகர்வட்டம் எனக்குத் தீர்மானமாகவே இருந்தது. அது இன்றுவரை சரியாகவே இருக்கிறது.
மற்றவர்களுக்குச் சளைக்காத அருமையான பாடல்களென நான் கருதும் பலபாடல்கள் எங்களிடமுள்ளன. இப்பாடல்களுக்குத் தொடர்பில்லாதவரிடம் இதற்கான விமர்சனத்தைக் கேட்க ஆசைதான். ஆனால் நடக்காது. இன்றுவரை ஒரு பின்னூட்டமும் வெளித்தரப்பிடமிருந்து வரவில்லை.
அதனால் என்ன? பாடல்களைப் பொறுத்தவரை வெளியாளான உங்களின் பார்வையை அறியத்தரலாமே? (முன்பு இயக்கப்பாடல்களைப் பற்றிய உங்கள் காட்டமான விமர்சனவரியொன்றைக் கண்டேன்.) இன்னும் இருபது பாடல்களுக்குப்பின் சிலவற்றின்மீது உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
எழுதிக்கொள்வது: யாழ்கோபி
வன்னியன் உங்கள் முயற்சி நல்ல முயற்சி தொடர வாழ்த்த்துக்கள் குறிப்பு:இன்றைய நாள்தான் உங்கள் தளம் கண்டேன் காரணம் நான்ணாழ்பாணத்தில் இருப்பதால் இன்றே உமது அனைத்துப் பாடல்களையும் கேட்டுவிட்டேன்
15.16 31.7.2006
வன்னியன்!
மயூரனுக்கான உங்கள் பின்னூட்டத்தில், தங்கள் மனப்பதிவை அழகாக விவரித்திருக்கின்றீர்கள். இதே மனக்குறை என்கும் உண்டு. ஈழவர் பற்றிய பிரத்தியேகமான எண்ணப்பாட்டுடன் உள்ளவர்கள் எங்களை நிராகரித்துச் செல்வது என்னமோ உண்மைதான். ஆனாலும், உங்கள் பணி மகத்தானது. பாரதிக்கே பதினேழுதானே. காலம் வரும் கவலை விடு நண்பா. உலகம் ஒருநாள் வியந்து வரும். அந்நாள் விரைந்தே வரும். எங்கள் எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் போற்றும் நல்லிதயங்களும் தமிழ்மணத்தில் இல்லாமலில்லை என்ற நினைப்பில் தொடர்ந்து செல்வோம்.
வன்னியன்
பார்வதி சிவபாதம் அவர்களின் இப்பாடலை மீண்டும் ஒரு முறை கேட்கும் ஆவலுடன் வந்த போதுதான் உங்களது இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்தேன். உங்கள் மனக்குறை அல்லது கவலையை அறிந்து கொண்டேன். இதே எண்ணம் எனக்கும் பலமுறை வந்து மனசு ஆதங்கப் பட்டிருக்கிறது.
ஒரே பதிவை இருவர் போடும் போது ஒருவருக்கு அளவுக்கதிமான பின்னூட்டம் வருவதையும் மற்றவர் கவனிக்கப் படாமலே போவதையும் கூட நான் அவதானித்திருக்கிறேன். பதிவின் தன்மையையும் விட பதிபவரின் செல்வாக்கு இங்கு முன் நிற்கிறது.
எமது பாடல்களோடு தொடர்புள்ளவர்களே கண்டு கொள்ளாமல் இருக்கும் போது தொடர்பில்லாதவர்கள் விமர்சனம் வைப்பார்கள் என்பது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.
எதுவாயினும் இப்படி நீங்கள் தொகுத்துக் கொண்டு வருவது மிகவும் நல்ல வேலை.