பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது
இதுவோர் திரைப்படப்பாடல். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'பிஞ்சு மனம்' என்ற திரைப்படத்தில் வந்த பாடல். தனிமையில் வாடும் முதியவர் ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது இப்பாடல். பாடியவர் குமாரசாமி. பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாருமின்றி அழுகின்றது ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை நேற்றிருந்த சொந்தமில்லை நேரினிலே இன்று இல்லை நாய்வளர்த்து பாலைவார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நம்பிப் பெற்ற பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும் கோவிலுண்டு பூசை செய்ய யாருமிங்கு இல்லை கொள்ளியிடக் கூடவொரு பிள்ளையிங்கு இல்லை கட்டிலுக்கு வந்தவளும் என்னை விட்டுப் போனாள் தொட்டில்வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார் விட்டபடி சுற்றுதடா பூமியென்ற பந்து இரத்த பாசம் என்பதெல்லாம் இங்கு வெறும் பேச்சு Labels: குமாரசாமி, திரைப்படப் பாடல், புதுவை இரத்தினதுரை |
Comments on "பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது"
மிகவும் அருமையான பாடல். மனசைத் தொடும் பாடல்.
தவித்துப் போன எமது உறவுகளின் நிலையை எடுத்துச் சொல்லும் பாடல்.
குமாரசாமியின் குரலும் பாடலுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது.
நன்றி சந்திரவதனா