இதுவோர் திரைப்படப்பாடல். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'பிஞ்சு மனம்' என்ற திரைப்படத்தில் வந்த பாடல். தனிமையில் வாடும் முதியவர் ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது இப்பாடல். பாடியவர் குமாரசாமி.
ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை நேற்றிருந்த சொந்தமில்லை நேரினிலே இன்று இல்லை
நாய்வளர்த்து பாலைவார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நம்பிப் பெற்ற பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும் கோவிலுண்டு பூசை செய்ய யாருமிங்கு இல்லை கொள்ளியிடக் கூடவொரு பிள்ளையிங்கு இல்லை
கட்டிலுக்கு வந்தவளும் என்னை விட்டுப் போனாள் தொட்டில்வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார் விட்டபடி சுற்றுதடா பூமியென்ற பந்து இரத்த பாசம் என்பதெல்லாம் இங்கு வெறும் பேச்சு
இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். ஒருநேரத்தில் மிகப்பிரபலமானதாயிருந்தது.
இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எல்லா இசையையும் பின்னுக்குத்தள்ளி உடுக்கின் ஒலி ஆவேசமான ஓருணர்வைத்தரும். சரியான பாடகர்களின் குரல்கூட அமுங்கிப்போனது போன்று சிலவேளை தோன்றும். இடமறிந்து இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் இன்னொரு பாரம்பரிய இசைக்கருவியான பறையும் புலிகளால் இசைப்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அது முக்கிய இசைக்கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பாடலை பிறகு தருகிறேன்.
இப்பாடலில் பார்வதி சிவபாதம் அவர்களின் குரலே மற்றைய குரல்களைவிட மேலோங்கியது போன்று எனக்குத் தோன்றுவதுண்டு. (சினிமாப்பாடல்களிலும், ஆண்-பெண் இருவரும் ஒரேநேரத்தில் பாடும்போது பெண்குரல் மற்றதை அமுக்குவதைப் பலமுறை அவதானித்திருக்கிறேன்).
சரி. இனி பாடலுக்கு வருவோம்.
குறிப்பு:வன்முறை பிடிக்காதவர்கள் இப்பாடலைக் கேட்க வேண்டாம். தங்கள் குழந்தைகள் பாடல்களைக் கேட்டு துவக்குத் தூக்கிச் சண்டைபிடிப்பார்கள் என்று கருதும் பெற்றோர்கள் இப்பாடலை உங்கள் பிள்ளைகள் கேட்பதுக்கு அனுமதிக்க வேண்டாம்.;-).
மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு வீசும் காற்றின் வேகம் கொண்டு மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள் மண்ணில் வந்த வேங்கையம்மா
அண்ணன்சொன்ன வேதம் கேட்டு விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள் ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள் ஆடும் கரும்புலிகளம்மா