திருவுடலில் வெடிசுமந்து
10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல். திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன் -எங்கள் சாதுரியன் யாழினியும் உயிர் கொடுத்தனர் பெருவிழியில் கனல்சுமந்து இவர் நடந்தனர் -தாண்டிக் குளமிருந்த பகைமுடித்து இவர் விழுந்தனர் நெருப்பென நிமிர்ந்தவர் இருப்பது அழித்திட எழுந்தவர் படையினை உடைத்தனர் -உயர் கரும்புலியாகியே களத்திடை ஆடியே கயவர்கள் தங்ககம் தகர்த்தனர் -வெடி மருந்துடன் தம்முடல் வெடித்தனர் சந்ததி காத்திட கந்தகம் சுமந்திவர் சாவினை நெஞ்சினில் -இவர் சந்தன மேனிகள் வெந்திடும் போதிலே சிந்தையில் தலைவனை நினைத்தனர் தமிழ் தேசத்தின் புயலென நிலைத்தனர் கப்டன் சாதுரியன் மேஜர் நிதன் மேஜர் யாழினி படங்களுக்கு நன்றி: அருச்சுனா Labels: கரும்புலி, ஜெயசிக்குறு |
Comments on "திருவுடலில் வெடிசுமந்து"