எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது. இதுவும் பார்வதி சிவபாதம் அவர்கள் சேர்ந்து பாடிய ஒரு பாடல். பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம். _________________________________ காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2) கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம் புரியாத புதிராகச் சென்றோம் எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது -இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள் வாழும்போது மானத்தோடு வாழ்பவன்தானே தமிழன் -தன் வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன் வழியில் இடறும் பகைகள் எரிய வருக வருக தமிழா -(2) உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து வெளியில் வருக தமிழா காற்றும்நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -நாங்கள் போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள் முளைப்போம் இந்த மண்ணில் -(2) எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து மூட்டும் தீயைக் கண்ணில் Labels: கரும்புலி, சாந்தன், பார்வதி சிவபாதம் |
Comments on "எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது"
வன்னியன்!
பார்வதி சிவபாதம் பாடிய பாடல்களில் இதுவும் ஒரு அருமையான பாடல். நாடியெல்லாம் ஒடுங்கியது என்று சொல்வார்களே. அப்படி ஒருநிலை இப்பாடலைக் கேட்கும் போது தோன்றும். ஞாபகப்படுத்தலுக்கும், பதிவுக்கும் ரொம்ப நன்றிகள்.
மணலாற்றில் இதயபூமித்தாக்குதலலின் பின்னர் அத்தாக்குதல் பற்றிய விபரணக்காட்சி கோம்பயன்மணல் மயானப் பகுதியில் வைத்திருந்த போது இப்பாடல் ஒலித் தொகுப்பு வெளிவந்திருந்த நேரமாதலால் இப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது அச்சூழலில் இப்பாடலைக் கேட்டபோது உள்ளமும் உடலும் ஒருவித வார்த்தைகளால் விபரிக்க முடியாத சிலிர்ப்பை அடைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. பாடலின் ஒலிவடிவிற்கும்வரி வடிவிற்கும் நன்றி.
வன்னியன்,
பாடலுக்கு நன்றி.
அன்புடன்
வெற்றி
மனதோடு, உணர்வுகளையும் உலுக்கி விடும் வரிகளும் குரல்களும்
வருகைக்கு நன்றி மலைநாடான்.
ஆம் இறமணன்,
எனக்கும் கோம்பையன் மணற் சுடலையில் நடந்த 'இதயபூமி-1' மாதிரியமைப்பு நினைவிருக்கிறது.
ஆனால் இப்பாடலை அக்காட்சியோடு ஒன்றிக் கேட்ட நினைவில்லை.
வேறு பல சந்தர்ப்பங்களில் இப்பாடல் அதீத உணர்ச்சிகளை ஏற்படுத்தியது.
வருகை தந்து கருத்துச் சொன்ன வெற்றி, சந்திரவதனாவுக்கு நன்றி