நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று
தொன்னூறுகளின் தொடக்க காலத்தில் வந்த பாடல்கள் மிக அருமையானவை. இந்தமண் எங்களின் சொந்த மண், நெய்தல் போன்ற இசைநாடாக்கள் வெளிவந்த காலமது. அப்போது வெளிவந்த பாடல்களில் ஒன்றுதான் இப்பாடல். மாவீரன் மேஜர் சிட்டுவின் குரலில் அருமையான பாடல். கடலில் எம்மவர் பட்ட துன்பங்களும், கடலில் தமிழர்படை பெற்ற வெற்றிக் களிப்பும் இப்பாடலில் வருகிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களிவை. |
Comments on "நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று"
அருமையான பாடல்.
நீண்டகாலத்தின் பின்கேட்டேன்.
பாடலுக்கு நன்றி வன்னியன்.
நெய்தல் நாடாவில் இருந்து பாடல்கள் தரமுடியுமா?
அருமையான பாடல்.
நீண்டகாலத்தின் பின்கேட்டேன்.
வருகைக்கு நன்றி பெயரில்லாதவரே.
நெய்தலில் இருந்து பாடல்கள் இடுவேன்.
சந்திரவதான,
வருகைக்கு நன்றி.
வன்னியன்!
இப் பாடலை மீள்நினைவூட்டியமைக்கு நன்றி. இப்போது வரும் பாடல்களிலும் பார்க்க முன்னர் வந்த பாடல்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதற்காக இப்போ வரும் பாடல்களில் குறையெனப் பொருள் கொள்ளத் தேவையில்லை.
எழுதிக்கொள்வது: thuyawan
பாடலுக்கு நன்றி வன்னியன்! அவ்வாறே முல்லைச் சமர் தொடர்பான பாடல் ஒன்று! சேனைப் புலவுக்குள் ஆனை புகுந்தது போலப் புலிகள் புகுந்தனர்! என்ற வரிகளோடு அமைந்திருக்கும்!
அப்பாடலைத் தேடித் தரிகின்றேன் கிடைக்கவில்லை! இணைக்க முடியுமா?
9.10 1.6.2004
மலைநாடான், தூயவன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மலைநாடான், எனக்கும் எண்பதுகள், தொன்னூறுகளின் தொடக்கத்தில் வந்த பாடல்களில் ஓர் ஈர்ப்பு.
தூயவன், நீங்கள் கேட்கும் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தது. வில்லிசை போல் ஒரு முயற்சி செய்தார்கள். தற்சமயம் என்னிடமில்லை. கிடைத்தால் தருவேன்.