ஓட்டிகளே படகோட்டிகளே
விடுதலைப் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. முழுநேரப் போராளிகளாயில்லாது ஆனால் அதற்கும் மேம்பட்ட செயற்பாடுகளைச் செய்தவர்கள் பலர். அவ்வகையில் தொடக்க காலத்தில் படகோட்டிகளாக இருந்தவர்களையும் குறிப்பிடலாம். புலிகளுக்கென்று தனியொரு கடற்பிரிவு உருவாகாத காலத்திலும், அப்படி உருவாகிய கடற்புறா என்ற அமைப்பு 'கடற்புலிகள்' என்ற அமைப்பாக வளர்ச்சியுறாத காலத்திலும் புலிகளுக்கு படகோட்டிய பொதுமக்கள் முக்கியமானவர்கள். பொதுவாக படகோட்டியை 'ஓட்டி' என்ற பெயராலேயே அழைப்பதுண்டு. தமிழக - ஈழக் கடற்பயணங்களுக்கும் ஆயுத வினியோகத்துக்கும் காயமடைந்தவர்களைப் பரிமாறுவதற்குமென்று கடலே அந்தநேரத்தில் போராட்டத்தின் அச்சாணியாக இருந்தது. கடலில் புலிகளுக்காகப் படகோட்டி கொல்லப்பட்ட ஓட்டிகள் பலருண்டு. அந்தப் படகோட்டிகள் நினைவாக எழுந்த பாடல். குரலுக்குரியவர் மாவீரன் மேஜர் சிட்டு. |
Comments on "ஓட்டிகளே படகோட்டிகளே"
நன்றி
வன்னியன்
உங்கள் பக்கத்துக்கு வந்ததும் மாங்கிளியும் மரங்கோத்தியும்.. பாட்டு ஒலிப்பதால
புதிதாக நீங்கள் போட்ட பாடலைக் கேட்பதற்கு சில சமயங்களில் சிரமம் வருகிறது.