மறவர் படைதான் தமிழ்ப்படை
காசி ஆனந்தன் அவர்களின் பாடல். இது இரண்டாம் முறையாக இசையமைக்கப்பட்ட பாடல். இக்கவிதை ஆயுதப்போராட்டத்துக்கு முன்பேயே எழுதப்பட்டது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. அப்படியானால் 'புலிப்படை' என்ற சொல் பின்பு மாற்றப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஆனால் காசி ஆனந்தன் அவர்கள் ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, புலிப்படை, புலி என்பவற்றைப் பாவித்து எழுதியுள்ளார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. 'தமிழன் கனவு' என்ற நூலில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன. |
Comments on "மறவர் படைதான் தமிழ்ப்படை"