தம்பி நிதனோடு தங்கை யாழினி
10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல். ______________________________________ தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள் சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர் வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன் சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி செந்தமிழர் வீதியிலே வந்துநின்ற எதிரிகளை தேடித்தேடி அடிகொடுத்தார் யாழினி -எங்கள் தம்பி நிதனோடு பொங்கி சிங்களத்துப் படைகளுக்கு சாதுரியன் அடிகொடுத்தான் பாடுநீ கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே கப்டன் சாதுரியன் மேஜர் நிதன் மேஜர் யாழினி படங்களுக்கு நன்றி: அருச்சுனா Labels: கரும்புலி, ஜெயசிக்குறு |
Comments on "தம்பி நிதனோடு தங்கை யாழினி"