அடைக்கலம் தந்த வீடுகளே
பிரபல சினிமாப்பாடகர் மலேசியா வாசுதேவன் பல ஈழப்போராட்டப் பாடல்களைப் பாடியிருப்பது தெரியும். அவற்றில் இதுவுமொரு பாடல். இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்களுக்கு விடைபெறும்போது புலிவீரன் பாடுவதாக அமைந்தது இப்பாடல். நல்ல இசை. நல்ல குரல். குரல்: மலேசியா வாசுதேவன் இசை: தேவேந்திரன் இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்
அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள் கதவு திறந்தீர்களே -எம்மை தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி பார்க்க மறந்தீர்களே பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே.. எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள் தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும் நினைவு நூறல்லவா நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா... பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான் முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள் சிறகால் மறைத்தீர்களே சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே... _________________________________ பாடலைத் தரவிறக்க Labels: தமிழகக் கலைஞர்கள், தேவேந்திரன், மக்கள், மலேசியா வாசுதேவன் |
Comments on "அடைக்கலம் தந்த வீடுகளே"