வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை
திருமலை மீது இன்னொரு பாடல். இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்ற பாடலிது. திருமலை மீட்பைப் பற்றிய பாடல். இப்போது கேட்க இனிக்கிறது. நீங்களும் கேளுங்கள். பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன். மற்றவர் யாரென்று தெரியவில்லை. பாடலுக்கு முன்பு இசைத்தட்டின் அறிமுகமும் வருகிறது. பொறுமையற்றவர்கள் சற்று இழுத்துவிட்டு பாட்டைக் கேட்கவும்
வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை இடிமின்னலோடு புயல் மழைபெய்திடும் அடிவானில் விடிவெள்ளி முகம்தந்திடும் தெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம் தமிழீழத் திசையாவும் சிவப்பாவதோ? கோணமாமலை மீது துயர் மூண்டது கொடியோரின் படைகள் அங்கு வந்தது எரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது உயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது. நாம்வாழ்ந்த நிலமெங்கும் விசப்புற்றுக்கள் நடமாட வழியில்லை முட்பற்றைகள் இசையோடு தமிழ்பாடும் ஒலியில்லையே விடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே விழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ மொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ எழுவானில் திசைவாழ எழுந்தாடுவோம் பொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம் ______________________________ பாடலைத் தரவிறக்க Labels: தமிழீழ இசைக்குழு, தலைநகர், திருமலைச் சந்திரன் |
Comments on "வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை"
வன்னி,
வணக்கம்.
பாடலுக்கு நன்றி. உங்களின் பதிவின் தலைப்புப் போல நமது தலைநகர் விரைவில் எம் வசம் வர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
வன்னி, இதிலை இன்னுமொரு சங்கதி என்னவென்றால், திருமலை அடியோட யாழ்ப்பாணம் தானாக[இலகுவாக] எம் வசம் வரப்போகுது. ரத்வத்தை மாமா 50,000 சிங்களப் படைகளை யாழ்ப்பாணத்திற்குள்ளை முடக்கினவர். இப்ப திருமலையைப் பாதுகாக்க யாழிலில் இருந்துதான் குறிப்ப்பிட்டளவு படைகளை எடுக்க வேணும். ஒரு கல்லிலை இரண்டு மாங்காய்கள்.
"இதுதாண்டா கடைசி அடி" என்றொரு பாடல் இருக்கிறதல்லவா? அதை தேடி எடுத்து கவனமாக வைத்திருங்கள் ;-)
கலாநிதி, வெற்றி,
வருகைக்கு நன்றி.
என்னால் இன்னும் முழுமையாக வெற்றிபற்றி நினைக்க முடியவில்லை. இது வெறும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே எனக்குப் படுகிறது. நாளைக்கே புலிகள் பழைய நிலைக்குத் திரும்பினால் எனக்கு அதிர்ச்சியாக இருக்காது.
ஆனால் இப்போது பிடித்த இடங்களுடன் மூதூரையும் பிடித்து சம்பூரை மையமாக வைத்து வலுவான ஒரு கட்டுப்பாட்டுப்பகுதியை ஏற்படுத்திவிட்டால் திருமலைத் துறைமுகத்தைப் பிடிப்பதற்குச் சமன். துறைமுகம் புலிகளின் கட்டுப்பாட்டுள் வந்துவிடும். கட்டுப்பாடென்பது இடத்தைப் பிடிக்கும் அர்த்தத்தில் இல்லை.
துறைமுகத்துள் உள்வருவோர் வெளிச்செல்வோர் எல்லோரையும் புலிகள் கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்துவிடுவர்.
குடாவழியாகச் செல்லும் எந்தக் கலத்தையும் தரையிலிருந்தே தாக்கியழிக்கும் நிலைக்கு புலிகள் இப்போது வந்துவிட்டதால் துறைமுகம் ஏறத்தாழ கட்டுப்பாட்டுக்குள் என்றமாதிரித்தான். புலிகள் செய்யவேண்டியது சம்பூருக்கும் நிலம்வழியான நேரடியான, சீரான வினியோகம் தான்.
நிற்க,
ஊடகங்கள் அளவுக்கதிகமாக துள்ளுகின்றன போலுள்ளது (வலைப்பதியும் எம்மைப்போலவே)
வெறும் 36 எறிகணைகளை அடித்துவிட்டு 'அகோர', 'பயங்கர', 'தீவிர' என்ற அடைமொழிகளோடு அவ்வெறிகணைத் தாக்குதல் பற்றிச் செய்தி எழுதுகிறார்கள்.
அத்தாக்குதல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் மறைமுக விளைவுகள் அரசதரப்புக்கு மிகக்கெடுதியாக இருந்தாலும் 36 என்பது யுத்தத்தில் ஒரு கணக்கே இல்லை.
மூதூர் விழுந்தது, விழுந்துவிட்டது, விழுகின்றது, கொண்டிருக்கிறது என்று விதம்விதமான காலவசனங்களோடு கடந்த 3 நாட்களாக செய்திகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
பிரச்சினை என்னவென்றால் எங்கும் கடுமையான நேரடிச் சண்டை நடக்கவில்லையென்பதும், புலிகள் கடுமையான தாக்குதல் திட்டமேதும் வைத்திருக்கவில்லையென்பதும் தான்.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இன்னும் கடைப்பிடிக்கிறோம் என்றும் இது ஒரு தற்காப்பு நடவடிக்கைதான் என்றும் சொல்லிக்கொண்டு இதற்கு மேல் புலிகள் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் களயதார்த்தம்.
மயூரன்,
வருகைக்கு நன்றி.
வெற்றிக்குச் சொன்ன பின்னூட்டம் தான் உங்களுக்கும்.
நீங்கள் சொன்ன பாடல் என்னிடமிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு அதைப்பாவிக்க வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன்.
எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி
நல்ல பாடல்.....
16.39 3.8.2006
வன்னியன்!
ஆய்வு ரீதியான உங்கள் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப்போவதாகவே என் எண்ணப்பாடும் உள்ளது.
செந்தழல் ரவி,
வருகைக்கு நன்றி.
நீங்கள் முதன்முதலாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
மலைநாடான்,
வருகைக்கு நன்றி. என் கணிப்பின்படி ஈச்சிலம்பற்றையிலிருந்து கரையோரத்தைப்பிடித்து சம்பூரையும் இணைத்த நிலப்பகுதியைக் கட்டுப்படுத்துவதே புலிகளின் முதன்மை நோக்கமாக இருக்கும். இது நடந்தால் மேலதிக நகர்வுகள் ஏதுமின்றியே கிட்டத்தட்ட துறைமுகம் கட்டுப்பாட்டுக்குள் வந்தமாதிரித்தான்.
வன்னி,
உண்மை நிலைமையை உடனுக்குடன் எங்கே வாசித்து அறிய முடியும்?
வன்னியன்,
உண்மை நிலைமையை உடனுக்குடன் எங்கே வாசித்து அறிய முடியும்?
வன்னி.
//என்னால் இன்னும் முழுமையாக வெற்றிபற்றி நினைக்க முடியவில்லை.//
உங்களின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். நாம் எதிரியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நீங்கள் குறிப்பிட்டது போல் இது "மனிதாபிமான நோக்கத்தோடு" நடாத்தப்பட்ட தாக்குதல்கள் என புலிகளின் இராணுவ பேச்சாளரே கூறியுள்ளார். ஆனால் சமாதானம் என்ற போர்வையில் எம் மக்கள் படும் இன்னல்கள் தொடரக்கூடாது. கடந்த வருட மாவீரர் நாள் உரையில் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல் எமது போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். தகுந்த நேரத்தில் சரியான முடிவை தலைவர் அவர்கள் எடுப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
யாழினி,
//உண்மை நிலைமையை உடனுக்குடன் எங்கே வாசித்து அறிய முடியும்? //
www.tamilnet.com உடனுக்குடன் நம்பகரமான செய்திகளைத் தந்து கொண்டிருக்கிறது.
எழுதிக்கொள்வது: Bavany
நன்றி உங்களிற்கு புதிய பாடலிற்கு
18.54 11.8.2006
வருகைதந்த வெற்றி, பவானி நன்றி.
திருமலை நடவடிக்கை இடையில் நிறுத்தப்பட்டுவிட்டது.
எதிர்பாத்தது தான். மாவிலாறும் படையினர் வசம் போய்விட்டது. ஆனால் வலுவான தாக்குதலொன்றைத் தொடங்குவதை நியாயப்படுத்த இந்த நில இழப்புப் பயன்பட்டது.
திருமலைத் துறைமுகத்தின்மேல் நினைத்த நேரத்தில எறிகணை பொழியும் நிலையில் புலிகள் இருப்பதே பெரிய விசயம்.
இப்போது யாழ்ப்பாணப்பக்கம்.
நான் அவசரப்பட்டு பாட்டுப் போடப்போவதில்லை;-)