விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது
கொழும்புத் துறைமுகத்தில் 1996 இல் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தி சில கடற்கலங்களை அழித்த தாக்குதலின் நினைவாக வெளிவந்த பாடலிது. 12.04.1996 அன்று அதிகாலை கொழும்புத் துறைமுகத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பாடல் இடம்பெற்ற ஒலிநாடா: கடற்கரும்புலிகள் பாகம் -3 பாடியவர்: சிட்டு இசையமைப்பு: முரளி பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை _____________________________________________
கடலிடை றதீசும் அனலிடை ரவாசும் காற்றிடை கலந்தவர் தானோ கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன் காவியமானவன் தானோ பொய்யாமொழியும் ரதனும் வரனும் போனார் மீண்டும் வரவில்லை மதனியும் விக்கியும் போயினர் சுபாசும் எம்மிடம் வரவில்லை விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது -துறை முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர் சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும்கரைந்ததது -பின்னர் இடியினோடு பகைவன்ஏறும் கலங்கள் எரிந்தன அழகுபூத்த எமதுஊரை அழிக்கநினைத்தவா -எம்மை அகதியாக்கி தெருவினோரம் மழையில்நனைத்தவா கடலின்புலிகள் உனதுநகரை கலக்கிமுடித்தனர் -படைக் கலங்கள்மூன்றை உடைத்தபோது உடலும்வெடித்தனர் தலைவன்வளர்த்த உறவைநினைத்து கடலில்குதித்தனர் -வெடி தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர் தமிழர்தேசம் எழுகஎழுக என்றுஆடினர் -எம் தலைவன்பெயரை நிலவும்அறிய உரத்துப்பாடினர் அமைதியாக உறங்கும்நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள் அன்னைபூமி விடியும்வரைக்கும் எமக்கும்அதுஇல்லை கடலின்புலிகள் இருக்கும்வரைக்கும் எமக்குப்பயமில்லை -இங்கு கரியபுலிகள் வெடிக்கும்திசையில் பகைக்குஜெயமில்லை Labels: கடற்புலிகள், கரும்புலி, களவெற்றி |
Comments on "விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது"
சம்பவம் நடந்த காலை முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் கிபிர் விமானங்கள் காட்டிய விளையாட்டில் ஓடித்திரிந்தது நினைவுக்கு வருகிறது.