தீயினில் எரியாத தீபங்களே
இன்று (05.10.2006) குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சம்பவத்தின் பத்தொன்பதாம் நினைவுநாள். தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் கைது செய்ப்பட்ட இவர்கள் சிறிலங்கா அரசதரப்பிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல். பாடியவர்: ரி.எல். மகாராஜன் பாடல்: புதுவை இரத்தினதுரை இசை: தேவேந்திரன் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள் காற்றும் ஒருகணம் வீச மறந்தது கடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்தது தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது தீயினில் எரியாத தீபங்களே -எம் தேசத்தில் நிலையான வேதங்களே மண்ணினில் விதையான முத்துக்களே -நாம் மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள் கடலினில் கடல்புறா பயணங்கள் போனது சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள் கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர் இளமையில் சருகாகிக் போனவரே -எம் இதயத்தில் உருவான கோவில்களே அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ் அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார் ஆகிய வேங்கைள் அனலிடை போயினர் காவிய நாயகர் களப்பலி ஆகினர் மக்களுக்காக கடல் சென்றீரே -மண மாலைகள் வாட முன்னர் போனீரே எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது இந்திய அரசது ஏன்துணை போனது இடியுடன் பெருமழை ஏன் உருவானது கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் -நீர் காட்டிய பாதையிலே செல்கின்றோம் தரவிறக்க _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: தமிழகக் கலைஞர்கள், தேவேந்திரன், புதுவை இரத்தினதுரை, மாவீரர் |
Comments on "தீயினில் எரியாத தீபங்களே"