யாரென்று நினைத்தாய் எம்மை?
இன்று தாண்டிக்குளச் சண்டையின் வெற்றிநாள். கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டு எதிரி படைநடவடிக்கை தொடங்கி சில இடங்களையும் கைப்பற்றியிருந்தான். இந்நிலையில் ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல். இதுபற்றி சற்று விரிவான பதிவு இங்கே. இவ்வெற்றியைக் குறித்த பாடல்தான் "யாரென்று நினைத்தாய் எம்மை" பாடல் எழுதியவர்: கடந்தவருடம் மறைந்த 'மாமனிதர்' கவிஞர் நாவண்ணன். பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன். _________________________________ |