• Anonymous commented:
    super songs Thanks

    வன்னியன் commented:
    சந்திரவதனா, வெற்றி,வருகைக்கு நன்றி.

    வெற்றி commented:
    வன்னி,பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    Chandravathanaa commented:
    பாடலுக்கு நன்றி

    Anonymous commented:
    vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...

    வன்னியன் commented:
    வெற்றி,வருகைக்கு நன்றி.பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறு...

    வெற்றி commented:
    வன்னி,மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.சங்கீ...

புகைப்படத் தளங்கள்

Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Friday, April 27, 2007

சி்ன்னஞ்சிறு ஊரு - ஆனையிறவுப் பாடல்

ஆனையிறவு என்பது ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஓரிடம். சொல்லொன்னாத் துயரங்களை எமக்குத் தந்த இடமது. ஆனால் அது எதிரியின் கையில் இருக்கும்வரைதான் தமிழர்க்குத் துன்பம். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் தமிழர்சேனையிடம் அப்படைத்தளம் முழுமையாக வீழ்ந்தபோது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஆனந்தக் கூத்தாடியது.
ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் அதிக துன்பங்களைத் தந்ததும், எமது கைகளில் வீழ்ந்தபோது அதிக மகிழ்ச்சி தந்ததும் இப்படைத்தளம்தான்.

ஆனையிறவுப் படைத்தள வெற்றிக்கு விதையான மாவீரரை நினைத்துப் பாடப்பட்ட பாடல் இது.

சின்னஞ்சிறு_ஊரு.mp...



சி்ன்னஞ்சிறு ஊரு
கண்ணழுத வாறு
தேடியுமக்காக காத்திருக்கும்

தென்னைமரத் தோப்பு உம்மையெதிர் பார்த்து
கண்ணிரண்டும் நோக பூத்திருக்கும் -எங்கள்
சின்னஞ்சிறு ஊரு கண்ணழுத வாறு
தேடியுமக்காக காத்திருக்கும்

பகைவென்று பகைவென்று விடைகொண்டவர் -ஆனை
யிறவெங்கும் புலிவீரர் கதைசொன்னவர்
தடைவென்று மாவீரர் எனவானவர் -நாளை
தமிழீழம் வருமென்று துயில்கின்றவர்

உப்புத் தரவையெங்கும் உங்களின் குருதி -இந்த
உப்பளக் காற்றினிலே உங்கள் சுருதி
எப்பொழுதும் கேட்கும் உங்கள் குரலே -நீங்கள்
எழுந்தே வரவேண்டும் எங்களின் அருகே

கண்களில் நீர்வழிய உமைநினைத்தோம் -உங்கள்
கல்லறை தனில்வந்து எமைநனைத்தோம்
விண்ணிருந்து இறங்கி கண்ணைத் திறப்பீர் -நீங்கள்
விழுந்த இடம்தன்னில் புன்னகை செய்வீர்

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, April 23, 2007

ஆனந்தப் பூங்காற்று -ஆனையிறவுப் பாடல்

ஆனையிறவு என்பது ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஓரிடம். சொல்லொன்னாத் துயரங்களை எமக்குத் தந்த இடமது. ஆனால் அது எதிரியின் கையில் இருக்கும்வரைதான் தமிழர்க்குத் துன்பம். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் தமிழர்சேனையிடம் அப்படைத்தளம் முழுமையாக வீழ்ந்தபோது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஆனந்தக் கூத்தாடியது.
ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் அதிக துன்பங்களைத் தந்ததும், எமது கைகளில் வீழ்ந்தபோது அதிக மகிழ்ச்சி தந்ததும் இப்படைத்தளம்தான்.

ஆனையிறவுப் படைத்தள வெற்றியின் களிப்பில் பாடப்பட்ட பாடல் இது.


ஆனந்தப்பூங்காற்று....


ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று
ஆனையிறவிலே ஏறிடும்போதிலே
ஆகா எம் கைகளில் ஆடுதம்மா
உப்புக்கடலே உப்பளக்காற்றே
உம்மைத் தழுவுகின்றோம்
ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட
ஏனோ அழுகின்றோம்

வீடிழந்து ஊரிழந்து ஓடிவந்தவர் -நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்
போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் -எல்லை
படையாகிப் புலியோடு நின்றவர்
எம் தலைவா எங்களுடன் நின்று எடுத்தாய் -மீண்டும்
எங்கள் ஊரில் சென்றுவாழ தெம்பு கொடுத்தாய்
ஆவிஉடல் யாவுமுமக் காகக்கொடுத்தோம் -தம்பி
அச்சமின்றி உம்மருகில் என்றுமிருப்போம்

வாழ்வளித்த வன்னிமண்ணே உன்னைக் கொஞ்சவா -நாங்கள்
பட்டகடன் உந்தனுக்கு கொஞ்ச நஞ்சமா
காலெடுத்து வந்தபகை வென்றவீரரே - உங்கள்
கையெடுத்து முத்தமிட கையைத் தாருமே -
மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம் -எங்கள்
ஊரிலேறி வந்தபகை யாவும் துடைப்போம்
நாளை தமிழ் ஈழமென நம்பியிருப்போம் -அந்த
நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, April 20, 2007

விழியில் சொரியும் அருவிகள்

1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம்.
பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர்.
அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.

திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது.
அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான
மேஜர் தணிகைமாறன்,
மேஜர் கதிரவன்,
மேஜர் மதுசா,
கப்டன் சாந்தா.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது.
மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில் இப்பாடல் வெளிவந்துள்ளது.

விழியில்_சொரியும்...






விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
பகைவன் கப்பலை முடித்தனர் -திரு
மலையில் வெடியாய் வெடித்தனர்.
தம்பி கதிரவன் எங்கே
தணிகை மாறனும் எங்கே
மதுசாவும் எங்கே
தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்
தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்
ஏறி நடந்தவரே -உங்கள்
ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக
கொடுத்தவரே
தமிழ் ஈழம் உமை மறக்காது
பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை
தீயில் எரித்துவிட்டீரே -அவன்
ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே
ஈழம் மலர வைத்தீரே
வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள்
வாசலில் துயர்க் கோலங்கள்
___________________________

பாடலைத் தரவிறக்க

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



திருமலை நகரினில் எரிமலை எழுந்தது

19.04.1995 அன்று திருமலைத் துறைமுகத்துள் விடுதலைப்புலிகளால் பாரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதல்தான் மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கி வைத்தது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஈழத்தின் கடற்கரையோரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சூரயா, வீரயா போன்ற போர்க்கலங்களின் பெயர்களைத் தெரியாமலிருக்க முடியாது. அடிக்கடி இக்கலங்களின் தாக்குதலுக்கு முகங்ககொடுக்க வேண்டியிருந்தது. இக்கலங்கள் தமிழர்களிடத்தில் மிகக் கடுமையான இழப்புக்களை மட்டுமன்றி பெரும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன.
இவற்றில் சூரயா கடற்கலம் திருமலைத்துறைமுகம் மீதான புலிகளின் கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இத்துடன் ரணசுறு கடற்கலமும் இன்னொரு கடற்கலமும் மூழ்கடிக்கப்பட்டன.
இக் கரும்புலித்தாக்குதலை நடத்தி நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
மதுசா, சாந்தா, தணிகைமாறன், கதிரவன் ஆகிய கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை நடத்தி வீரச்சாவடைந்தனர்.

இவ்வெற்றியைக் கொண்டாடும் பாடல்தான் இவ்விடுகையில் வரும் பாடல்.
பாடியவர் திருமலைச்சந்திரன்.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: இசைபாடும் திரிகோணம்.

திருமலை_நகரினில்_எ...

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



பூபதித்தாய் அவள் போதித்தாள்

இன்று அன்னை பூபதி அவர்கள் நினைவுநாள்.
இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை முறையில் ஒருமாதகாலம் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர்தான் அன்னை பூபதி.

அவரது நினைவுநாளான இன்று அவரது நினைவுபப்பாடல் இவ்வலைப்பதிவில் இடம்பெறுகிறது.

பூபதி_தாயவள்_போதி...

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, April 11, 2007

விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது

கொழும்புத் துறைமுகத்தில் 1996 இல் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தி சில கடற்கலங்களை அழித்த தாக்குதலின் நினைவாக வெளிவந்த பாடலிது.
12.04.1996 அன்று அதிகாலை கொழும்புத் துறைமுகத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

பாடல் இடம்பெற்ற ஒலிநாடா: கடற்கரும்புலிகள் பாகம் -3
பாடியவர்: சிட்டு
இசையமைப்பு: முரளி
பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை
_____________________________________________

விடியும்நேரம்_பகைவ...


கடலிடை றதீசும் அனலிடை ரவாசும்
காற்றிடை கலந்தவர் தானோ
கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன்
காவியமானவன் தானோ
பொய்யாமொழியும் ரதனும் வரனும்
போனார் மீண்டும் வரவில்லை
மதனியும் விக்கியும் போயினர்
சுபாசும் எம்மிடம் வரவில்லை


விடியும்நேரம் பகைவன்தேசம் உறங்கிக்கிடந்தது -துறை
முகத்தினுள்ளே கடலின்புலிகள் இறங்கிநடந்தனர்
சிறிதுநேரம் அமைதியாகி பொழுதும்கரைந்ததது -பின்னர்
இடியினோடு பகைவன்ஏறும் கலங்கள் எரிந்தன

அழகுபூத்த எமதுஊரை அழிக்கநினைத்தவா -எம்மை
அகதியாக்கி தெருவினோரம் மழையில்நனைத்தவா
கடலின்புலிகள் உனதுநகரை கலக்கிமுடித்தனர் -படைக்
கலங்கள்மூன்றை உடைத்தபோது உடலும்வெடித்தனர்

தலைவன்வளர்த்த உறவைநினைத்து கடலில்குதித்தனர் -வெடி
தாங்கிப்பகைவர் துறையுள்புகுந்து வெடித்துஅதிர்ந்தனர்
தமிழர்தேசம் எழுகஎழுக என்றுஆடினர் -எம்
தலைவன்பெயரை நிலவும்அறிய உரத்துப்பாடினர்

அமைதியாக உறங்கும்நேரம் பகைக்குஇனியில்லை -எங்கள்
அன்னைபூமி விடியும்வரைக்கும் எமக்கும்அதுஇல்லை
கடலின்புலிகள் இருக்கும்வரைக்கும் எமக்குப்பயமில்லை -இங்கு
கரியபுலிகள் வெடிக்கும்திசையில் பகைக்குஜெயமில்லை

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________