நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக
05.10.1987 அன்று இந்திய அரசாற் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட இன்னொரு பாடல் இது. தேனிசைச் செல்லப்பாவின் குரலுக்கு இருக்கும் தனித்துவம் இப்பாடலிலும் வெளிப்படுகிறது. இவரின் குரலில் இப்பாடல் இனம்புரியாத ஓர் உணர்வைத் தருகிறது. மிக எளிமையான, உணர்வான இசையமைப்பு. பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள் |