சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான சாகரவர்த்தனாவை தகர்த்தழித்த கடற்கரும்புலிகள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலிது.
19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் தரித்துநின்ற இக்கட்டளைக்கப்பல் கடற்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இக்கப்பல் தகர்ப்பில் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
இக்கட்டளைக்கப்பலின் கப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரி விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். மிக நீண்டகாலம் புலிகளின் தடுப்புக்காவலில் இருந்த இவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
10/07/2007 அன்று விடுதலைப்புலிகளின் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலதின் பதினேழாவது வருட நினைவுநாள். 10/07/1990 அன்றுதான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் நடப்பதற்கு சரியாக ஒருமாதத்தின் முன்புதான் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது.
கரும்புலித் தாக்குதல் வடிவம் 1987 ஆம் ஆண்டு ஜூலைமாதம் ஐந்தாம்நாள் கரும்புலி கப்டன் மில்லரினால் நெல்லியடியில் தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வடிவம் பிறகு கடலிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வடமராட்சிக் கடலில் தரித்துநின்ற கட்டளைக் கப்பலொன்றின்மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல் இங்குப் பதிவாக்கப்படுகிறது. பாடியவர்: பார்வதி சிவபாதம். இசை: கண்ணன்.
கடற்கரும்புலிகள் நினைவாக எழுதப்பட்ட பாடலிது. இது வழமையான பாடல்களிலிருந்து சற்று வித்தியாசமான களத்தைக் கொண்டிருக்கிறது. பாடல் எதைப்பற்றி இருக்கிறதென்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு கேட்டால்தான் பாடலை முழுமையாக உணர முடியும்.
விடுதலைப் புலிகளின் கரும்புலித்தாக்குதல்கள் பல்வேறு வகைப்பட்டவை. வெடிமருந்து நிரம்பிய வாகனத்துடன் சென்று இலக்கை அடைந்ததும் வெடித்தல், வெமருந்துப்படகை கடற்கலங்களில் மோதி வெடிக்கவைத்து கடற்கலத்தை மூழ்கடித்தல், சிறப்பு அதிரடியணியாக இலக்கை அடைந்து எதிரியுடன் சண்டையிட்டு நோக்கத்தை நிறைவேற்றல், வெடிகுண்டை உடலிற் பொருத்தி தருணம் பார்த்திருந்து வெடிக்க வைத்து மனித இலக்குகளை அழித்தல் என்ற முறைகளில் அத்தாக்குதல்கள் அமையும். கடலில் நடத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களின் இன்னொரு வகையுமுண்டு. நீரடியால் நீந்திச்சென்று குண்டை கடற்கலத்தில் பொருத்தி வெடிக்கவைத்து அக்கலத்தை மூழ்கடிக்கும் முறையே அது. தொடக்கத்தில், குண்டைப் பொருத்திவிட்டுத் திரும்பி வராமல், சேர்ந்தே வெடிக்கும் முறையில் சில தாக்குதல்களைப் புலிகள் நடத்தினார்கள். மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கிவைத்த திருகோணமலைத் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு கடற்கரும்புலிகள் அவ்வாறு தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்திருந்தனர். குண்டைப் பொருத்தி நேரக்கணிப்பியை (Timer) இயக்கிவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்பிவரும் முறையிலும் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். [திட்டமிடப்பட்டதை மீறி தாக்குதல் நடத்துபவரின் முடிபுக்கேற்பவும் நிலைமை மாறுவதுண்டு. விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலான நெல்லியடித் தாக்குதலில், தாக்குதலாளி வாகனத்தை விட்டுவிட்டுப் பாதுகாப்பாக திரும்பிவருவதே திட்டமாக இருந்தும் கப்டன் மில்லர் வாகனத்துடன் சேர்ந்து வெடித்திருந்தார்.]
இந்தப்பாடல், நீரடியால் நீந்திச்சென்று எதிரியின் கடற்கலத்தில் குண்டுபொருத்தும் கரும்புலி வீரர் பாடுவதாக எழுதப்பட்டுள்ளது. நேரக்கணிப்பியை இயக்கிவிட்டுத் திரும்பிவராமல் குண்டுடன் சேர்ந்து தானும் வெடிக்கும் கரும்புலிவீரரே இப்பாடலுக்குரியவர்.
உண்மையில் தாக்குதல் நடத்தப்படும் முறையை விட்டுவிடுவோம். இப்போது அக்கரும்புலிவீரர் எதிரியின் கடற்கலத்தின் அடிப்பாகத்தில் குண்டை அழுத்திப் பிடித்தபடி, நேரக்கணிப்பியை இயக்கிவிட்டுக் காத்திருக்கிறார். சிலநிமிடங்களில் குண்டுவெடிக்கப் போகிறது. இன்னும் ஐந்து மணித்துளிதான் இருக்கிறது. இந்தநிலையில் அக்கரும்புலி வீரர் ஒவ்வொரு மணித்துளியாகக் குறைத்துக் கொண்டு பாடுகிறார். இனி பாடலைக் கேளுங்கள்.
பாடல் தரும் உணர்ச்சிக்குக் காரணம் பாடல்வரிகளா, இசையா, குரலா என்பதைச் சொல்ல முடியாது. தேனிசை செல்லப்பாவின் குரல் எவ்வளவு அருமையாகப் பொருந்துகிறது! இசை மிக அருமையாக இருக்கிறது. பாடல்வரிகள் பற்றி எனக்குக் கருத்தில்லை. காசியானந்தன் அவர்கள் எழுதிய பாடல்களின் வெற்றிக்கு அவரின் வரிகளையும்விட தேனிசை செல்லப்பாவின் குரல்தான் பெரியளவு காரணமாக இருக்கிறதென்பதே என் கருத்து.
இன்னும் ஐந்துமணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ் ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும் என்னை நீவாழத் தருகிறேன் -தமிழ் ஈழத்தாயே போய்வருகிறேன்.
இன்னும் நான்கு மணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ் ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.
எங்கள் கடலெல்லை யார்தாண்டுவார் ஈழ மணிநாட்டை எவன்தீண்டுவான் குண்டு தமிழ்நெஞ்சை யார்கொல்லுவான் புலிகள் உயிர்மூச்சை எவன்வெல்லுவான்
இன்னும் மூன்று மணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ் ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.
கொலைஞர் ஆட்சிவிழ நான்தாக்குவேன் கொடியர் படைவெறியர் உயிர்போக்குவேன் தலைவர் ஆணைநான் நிறைவேற்றுவேன் தமிழர் தாய்மண்ணைக் காப்பாற்றுவேன்
இன்னும் இரண்டு மணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ் ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும்.
இன்றுகளத்தில் நான் மடிதல்கூடும் என்பின்னும் புலிகள் படைபோராடும் வென்று தமிழீழம் வாகைசூடும் விடுதலைக் கொடி காற்றிலாடும்
இன்னும் ஒரு மணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் -தமிழ் ஈழமென் வெற்றிச் செய்தி படிக்கும். என்னை நீவாழ தருகிறேன் -தமிழ் ஈழத்தாயே போய் வருகிறேன்.
கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டு எதிரி படைநடவடிக்கை தொடங்கி சில இடங்களையும் கைப்பற்றியிருந்தான். இந்நிலையில் ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.
இதுபற்றி சற்று விரிவான பதிவு இங்கே.
இவ்வெற்றியைக் குறித்த பாடல்தான் "யாரென்று நினைத்தாய் எம்மை" பாடல் எழுதியவர்: கடந்தவருடம் மறைந்த 'மாமனிதர்' கவிஞர் நாவண்ணன். பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன். _________________________________
வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.
ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.
இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு