• Anonymous commented:
    super songs Thanks

    வன்னியன் commented:
    சந்திரவதனா, வெற்றி,வருகைக்கு நன்றி.

    வெற்றி commented:
    வன்னி,பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    Chandravathanaa commented:
    பாடலுக்கு நன்றி

    Anonymous commented:
    vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...

    வன்னியன் commented:
    வெற்றி,வருகைக்கு நன்றி.பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறு...

    வெற்றி commented:
    வன்னி,மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.சங்கீ...

புகைப்படத் தளங்கள்

Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Saturday, May 27, 2006

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது.
இதுவும் பார்வதி சிவபாதம் அவர்கள் சேர்ந்து பாடிய ஒரு பாடல்.

பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்.
_________________________________



காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்



எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது -இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

வாழும்போது மானத்தோடு வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

காற்றும்நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, May 19, 2006

போரம்மா

இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். ஒருநேரத்தில் மிகப்பிரபலமானதாயிருந்தது.

இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எல்லா இசையையும் பின்னுக்குத்தள்ளி உடுக்கின் ஒலி ஆவேசமான ஓருணர்வைத்தரும். சரியான பாடகர்களின் குரல்கூட அமுங்கிப்போனது போன்று சிலவேளை தோன்றும். இடமறிந்து இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் இன்னொரு பாரம்பரிய இசைக்கருவியான பறையும் புலிகளால் இசைப்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அது முக்கிய இசைக்கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பாடலை பிறகு தருகிறேன்.

இப்பாடலில் பார்வதி சிவபாதம் அவர்களின் குரலே மற்றைய குரல்களைவிட மேலோங்கியது போன்று எனக்குத் தோன்றுவதுண்டு. (சினிமாப்பாடல்களிலும், ஆண்-பெண் இருவரும் ஒரேநேரத்தில் பாடும்போது பெண்குரல் மற்றதை அமுக்குவதைப் பலமுறை அவதானித்திருக்கிறேன்).

சரி. இனி பாடலுக்கு வருவோம்.

குறிப்பு: வன்முறை பிடிக்காதவர்கள் இப்பாடலைக் கேட்க வேண்டாம்.
தங்கள் குழந்தைகள் பாடல்களைக் கேட்டு துவக்குத் தூக்கிச் சண்டைபிடிப்பார்கள் என்று கருதும் பெற்றோர்கள் இப்பாடலை உங்கள் பிள்ளைகள் கேட்பதுக்கு அனுமதிக்க வேண்டாம்
.;-).



போரம்மா
உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்
ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்
******

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு
வீசும் காற்றின் வேகம் கொண்டு
மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா
மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்
மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு
விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி
ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, May 17, 2006

புலியொரு காலமும் பணியாது

இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.
வரிகள்: பொன். கணேசமூர்த்தி.
பாடியவர்: மேஜர் சிட்டு



புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது -எங்கள்
நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை
எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும் -சில
மந்திகள் கொடிதாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை
வாவா... -இனி
குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்
பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி
மலந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்
வாவா... -இனி
சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்
களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி
மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை தேதியில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமின்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு
வாவா... -எங்கள்
ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, May 15, 2006

சின்ன சின்னக் கூடு கட்டி

யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது. அந்த நேரத்தில் இப்பாடலைக் கேட்கும்போது ஏற்பட்ட உணர்வைச் சொல்ல முடியாது. வெளிவந்த மக்களின் வேதனையையும், ஊர் திரும்பும் வேட்கையையும் சொல்லும் பாடலிது. போருக்கான அறைகூவலாகவும் உள்ளது.

குரலுக்குச் சொந்தக்காரர்கள்: மேஜர் சிட்டு, சுகுமார்.




சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர்பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது


வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்
எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்
ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்

எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்
பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்
பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்

எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, May 12, 2006

குனியாது கடல்வேங்கை.

இம்முறை கடற்புலிகள் பற்றிய பாடலொன்று.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், மேஜர் சிட்டு.
இசை: முரளி
பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.

இது கொழும்புத் துறைமுகத்தில் 1996 ஆம் ஆண்டு கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.




கடலின் காற்றே கடலின் காற்றே
எரியும் புலியைத் தழுவிவிடு
உயிரைக் கரைக்கும் புலிகள் மூச்சை
கரையை நோக்கி உலவவிடு

குனியாது கடல்வேங்கை ஒருநாளும் -வைத்த
குறியேதும் தறவாது இடிவீழும்
பணியாது தமிழ் ஈழம் போராடும் -எங்கள்
பகைமீது இனிமேலும் இடிவீழும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

***
ஊரிலிருந்து வேரையறுத்து
உறவைக் கலைத்த முகத்திலே
காறியுமிழ்ந்தேறி மிதித்தார்
அவர்கள் துறை முகத்திலே
கரிய புலிகள் இனியும் புதிய
சரிதம் எழுதும் பொழுதிலே
கடலின் புலிகள் படகில் எழுந்தார்
பகைவன் சாவின் விளிம்பிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

***
தலைவன் காட்டும் வழியில் நடந்து
கடலின் வேங்கை விரைந்திடும்
தமிழர் தேசம் விடியும் வரையும்
கரிய புலிகள் உருகிடும்
உலகம் முழுதும் புருவம் உயர
கடலின் புலிகள் நடந்திடும்
தமிழன் நிலத்தை அழிக்கும் பகைவன்
உயிரை புலிகள் குடித்திடும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

***
கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும்
குகையில் வீழ்ந்த ஒரு அடி
குளறக் குளறக் கடலின் புலிகள்
கொழும்பில் இடிக்கும் பலஇடி
கடலின் புலிகள் எழுவார் எனிலோ
திசைகள் முழுதும் காலிலே
இனிமேல் அதிரும் வெடிகள் முழுதும்
பகைவன் ஊரின் தோளிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Tuesday, May 09, 2006

புலியாட்டம் அடு, பூபாளம் பாடு.

"புலியாட்டம் ஆடு
பூபாளம் பாடு"

இதுவும் வீதி நாடகங்களில் பாடப்பட்டு மிகப்பிரபல்யமான பாடல்.
பாடியவரின் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஆளை நன்றாக ஞாபகம் இருக்கிறது.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, May 08, 2006

டப்பாங்கூத்துப் பாடல்கள்

ஜெயசிக்குறு தொடங்கப்பட்டதின் பின்பு வன்னியில் தெருக்கூத்து அல்லது வீதிநாடகங்கள் எனப்படும் கலை மிகப்பரந்தளவில் எழுச்சி பெற்றது. புலிகளின் மிகமுக்கிய பரப்புரை ஊடகமாக அது இருந்தது. மக்கள் கலைஞர்களாலும், போராளிக் கலைஞர்களாலும் இவை அரங்கேற்றப்பட்டன. ஒலிபெருக்கிகள் ஏதுமின்றி நேரடியாகவே மக்களுடன் பேசும் நாடகங்கள் இவை.

இவ்வாறான வீதி நாடகங்களின் போது சில பாடல்கள் பாடப்பட்டன. அவைகள் பின் ஒலித்தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
அப்படி வந்த பாடல்களில் ஒன்றை இப்போது கேளுங்கள்.

"டப்பாங்கூத்து பாட்டுத்தான்"
இப்பாடலைப் பாடியவர் 'குட்டிக்கண்ணன்' என்ற இளங்கலைஞர். அப்போது பத்தோ பதினொன்றோ தான் அவரது வயது.வன்னியெங்கும் சுழன்று திரிந்து பாடல்களைப் பாடுவார். நல்ல குரல் வளமுடையவர்.





டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்
காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்
காதில கொஞ்சம் போட்டுப்பாரு
குட்டிக்கண்ணன் றோட்டில
வந்து நிண்டு பாட்டில -(2)
நாட்டுக்காக செய்தியொன்று
சொல்லிறன் தெருக்கூத்தில -(2)


நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம்
சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே
மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே -(2)
இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு



அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க
அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க
காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க -(2)
இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு



நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள்
நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும்
அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும் -(2)
இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு




**************
இப்பதிவும் பாடலும் நட்சத்திரக் கிழமையின் போது 'பூராயத்தில்' இடப்பட்டவை.
பாடல்களுக்கென்று தனிப்பக்கமாக இத இருப்பதால் இங்கு அப்பதிவு மாற்றப்படுகிறது.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________