ஆண்டாண்டு காலமதாய் நாம்
இப்பாடல் குட்டிக்கண்ணனால் பாடப்பட்டு பிரபலமான பாடல். வீதி நாடகங்கள் உட்பட பல இசைநிகழ்ச்சிகள் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். ஏராளமானோரைக் கவர்ந்தது இப்பாடல். எளிமையான இசை, அழகான வரிகள். |
________________
Click Here To Earn Moneyஇப்பாடல் குட்டிக்கண்ணனால் பாடப்பட்டு பிரபலமான பாடல். வீதி நாடகங்கள் உட்பட பல இசைநிகழ்ச்சிகள் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். ஏராளமானோரைக் கவர்ந்தது இப்பாடல். எளிமையான இசை, அழகான வரிகள். |
இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது. ஏற்கனவே பதிவிடப்பட்ட பாடல். சிலதினங்களின்முன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் நினைவாக அவர் எழுதிய இப்பாடல் மீள்பதிவாக்கப்படுகிறது. வரிகள்: பொன். கணேசமூர்த்தி. பாடியவர்: மேஜர் சிட்டு புலியொரு காலமும் பணியாது -எந்த படைவந்த போதிலும் சலியாது திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன் அலையாதிடுமோ கிடையாது -எங்கள் நிலைமாறிடுமோ நடவாது எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை எம்மை ஆளவென்று சதிபோடும் முள்ளை மலரென்று கதைபேசும் -சில மந்திகள் கொடிதாவும் கொட்டிலுக்கு கூரையில்லை கொண்டுவந்த தேதுமில்லை கட்டுதற்கு ஆடையில்லை மானமின்னும் சாகவில்லை. பட்டினிக்கு வட்டியில்லை வாவா... -இனி குட்டநின்று வாழ்வதில்லை வாவா. பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப் பறிப்போம் திடமாய் நடைபோடு மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி மலந்திடும் கூத்தாடு நாம் பிறந்த ஊருமில்லை நட்டுவந்த தேதுமில்லை ஆதரவுக்காருமில்லை ஆறுதற்கு நேரமில்லை ஓருயிர்தான் யாவருக்கும் வாவா... -இனி சாவதேனும் ஓய்வதில்லை வாவா. கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ் களத்தில் கயவரது தேரோட்டம் மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி மறுபடி கொடியேற்றும் பள்ளியில்லை தேதியில்லை சொல்லியள யாருமில்லை உள்ளமின்றி மிச்சம் இல்லை உயிர்துறக்க அச்சம் இல்லை போரெடுத்து வெல்வதற்கு வாவா... -எங்கள் ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா. Labels: சிட்டு, பொன்.கணேசமூர்த்தி, மக்கள் துயர் |
திருமலை மீது இன்னொரு பாடல். இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்ற பாடலிது. திருமலை மீட்பைப் பற்றிய பாடல். இப்போது கேட்க இனிக்கிறது. நீங்களும் கேளுங்கள். பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன். மற்றவர் யாரென்று தெரியவில்லை. பாடலுக்கு முன்பு இசைத்தட்டின் அறிமுகமும் வருகிறது. பொறுமையற்றவர்கள் சற்று இழுத்துவிட்டு பாட்டைக் கேட்கவும்
வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை இடிமின்னலோடு புயல் மழைபெய்திடும் அடிவானில் விடிவெள்ளி முகம்தந்திடும் தெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம் தமிழீழத் திசையாவும் சிவப்பாவதோ? கோணமாமலை மீது துயர் மூண்டது கொடியோரின் படைகள் அங்கு வந்தது எரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது உயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது. நாம்வாழ்ந்த நிலமெங்கும் விசப்புற்றுக்கள் நடமாட வழியில்லை முட்பற்றைகள் இசையோடு தமிழ்பாடும் ஒலியில்லையே விடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே விழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ மொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ எழுவானில் திசைவாழ எழுந்தாடுவோம் பொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம் ______________________________ பாடலைத் தரவிறக்க Labels: தமிழீழ இசைக்குழு, தலைநகர், திருமலைச் சந்திரன் |
இதுவரை ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் பதியப்பட்ட பாடல்களுள் மாவீரர் மேஜர் சிட்டு அவர்கள் பாடிய பாடல்களின் பட்டியலும் இணைப்பும். கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் ஓட்டிகளே படகோட்டிகளே நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று புலியொரு காலமும் பணியாது சின்ன சின்ன கூடுகட்டி குனியாது கடல்வேங்கை ஒருநாளும் கடலின் அலைவந்து கரையில் விளையாடும் விழியில் சொரியும் அருவிகள் |
1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம். பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர். அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது. திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது. அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன், மேஜர் மதுசா, கப்டன் சாந்தா. இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது. மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில் இப்பாடல் வெளிவந்துள்ளது.
விழியில் சொரியும் அருவிகள் -எமை விட்டுப்பிரிந்தனர் குருவிகள் பகைவன் கப்பலை முடித்தனர் -திரு மலையில் வெடியாய் வெடித்தனர். தம்பி கதிரவன் எங்கே தணிகை மாறனும் எங்கே மதுசாவும் எங்கே தங்கை சாந்தா நீ எங்கே தாயின் மடியினில் அங்கே -கடல் தாயின் மடியினில் அங்கே பாயும் கடற்புலியாகி வெடியுடன் ஏறி நடந்தவரே -உங்கள் ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக கொடுத்தவரே தமிழ் ஈழம் உமை மறக்காது பகை கோண மலையிருக்காது வேகமுடன் பெருங்கோபமுடன் பகை வீழும் வெடியெனவானீர் பிரபாகரன் எனும் தீயின் விழிகளும் ஈரம் கசிந்திடப் போனீர் விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி வேகத்தில் கப்பல் விரிந்தது நீரின் அடியினில் நீந்தி பகைவரை தீயில் எரித்துவிட்டீரே -அவன் ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே ஈழம் மலர வைத்தீரே வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள் வாசலில் துயர்க் கோலங்கள் ___________________________ பாடலைத் தரவிறக்க Labels: கடற்புலிகள், கரும்புலி, சிட்டு, நினைவுப்பாடல், மாவீரர் |
சிட்டு என்ற அருமையான போராளிப் பாடகனை அறிமுகப்படுத்திய பாடலிது. அதன்பின் ஏறத்தாழ 75 பாடல்களைப் பாடியிருக்கிறார் சிட்டு. 01.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினருக்கெதிரான மூன்றாவது வலிந்த தாக்குதலான ஓமந்தைப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவடைந்துவிட்டார் மேஜர் சிட்டு. பாடலை எழுதியது இன்னொரு போராளிக்கலைஞன் மேஜர் செங்கதிர். மேஜர் சிட்டு வீரச்சாவடைந்த இந்நாளில் இப்பாடலைப் பதிவாக்குவது சிறப்பே. கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள் உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள் மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம் கண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரே எண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காது என்னவளம் இல்லை தமிழீழமதில் ஏனஞ்சி வாழவேணும் சிங்களத்தில் ஒன்றுபடு தமிழினமே போரிட நீ -இனி ஓடட்டும் எதிரிபடை மண்ணை விட்டு ============================= பாடியவர்: மேஜர் சிட்டு பாடல் வரிகள்: மேஜர் செங்கதிர் இசைத்தட்டு: புதியதோர் புறம். |