பிரபல சினிமாப்பாடகர் மலேசியா வாசுதேவன் பல ஈழப்போராட்டப் பாடல்களைப் பாடியிருப்பது தெரியும். அவற்றில் இதுவுமொரு பாடல்.
இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்களுக்கு விடைபெறும்போது புலிவீரன் பாடுவதாக அமைந்தது இப்பாடல். நல்ல இசை. நல்ல குரல்.
குரல்: மலேசியா வாசுதேவன் இசை: தேவேந்திரன் இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்
வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.
ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.
இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு.
இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது.
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
(பாடல் வரிகளை முற்றுமுழுதாகச் சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.)
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று
தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம் வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம் வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள் சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள் வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை
மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று
இது ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் வெளிவந்த பாடல். ஒருவித நையாண்டித்தன்மையோடு அமைந்த பாடல். சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவ்நத இன்னொரு வெற்றிப்பாடல். இவர்கள் இருவரின் கூட்டணியில் பல துள்ளிசைப்பாடல்கள் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றன. இருவரும் சிறந்த கூட்டாளிகளும்கூட. (ஈழப்போராட்டத்தில் இவர்கள் இருவரினதும் பங்கு மிகக்காத்திரமானது. தனியே பாடகர்கள் என்றில்லாது பல தளங்களிற் செயலாற்றியவர்கள்.)
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் புதுவை இரத்தினதுரை. இசையமைப்பு முரளி.
எந்த மாதிரி அட அந்தமாதிரி எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ் ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி
ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ உள்ளதையும் தந்து போறா நந்தலாலா மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா
அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள் அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா
இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள் தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா
10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல். ______________________________________
தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள் சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ
பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர்
வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன் சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி
கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே
10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.
திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன் -எங்கள் சாதுரியன் யாழினியும் உயிர் கொடுத்தனர் பெருவிழியில் கனல்சுமந்து இவர் நடந்தனர் -தாண்டிக் குளமிருந்த பகைமுடித்து இவர் விழுந்தனர்
இன்று தாண்டிக்குளச் சண்டையின் வெற்றிநாள். கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டு எதிரி படைநடவடிக்கை தொடங்கி சில இடங்களையும் கைப்பற்றியிருந்தான். இந்நிலையில் ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.
இவ்வெற்றியைக் குறித்த பாடல்தான் "யாரென்று நினைத்தாய் எம்மை" பாடல் எழுதியவர்: அண்மையில் மறைந்த கவிஞர் நாவண்ணன். பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன். _________________________________
விடுதலைப் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. முழுநேரப் போராளிகளாயில்லாது ஆனால் அதற்கும் மேம்பட்ட செயற்பாடுகளைச் செய்தவர்கள் பலர். அவ்வகையில் தொடக்க காலத்தில் படகோட்டிகளாக இருந்தவர்களையும் குறிப்பிடலாம். புலிகளுக்கென்று தனியொரு கடற்பிரிவு உருவாகாத காலத்திலும், அப்படி உருவாகிய கடற்புறா என்ற அமைப்பு 'கடற்புலிகள்' என்ற அமைப்பாக வளர்ச்சியுறாத காலத்திலும் புலிகளுக்கு படகோட்டிய பொதுமக்கள் முக்கியமானவர்கள்.
பொதுவாக படகோட்டியை 'ஓட்டி' என்ற பெயராலேயே அழைப்பதுண்டு. தமிழக - ஈழக் கடற்பயணங்களுக்கும் ஆயுத வினியோகத்துக்கும் காயமடைந்தவர்களைப் பரிமாறுவதற்குமென்று கடலே அந்தநேரத்தில் போராட்டத்தின் அச்சாணியாக இருந்தது.
கடலில் புலிகளுக்காகப் படகோட்டி கொல்லப்பட்ட ஓட்டிகள் பலருண்டு. அந்தப் படகோட்டிகள் நினைவாக எழுந்த பாடல்.
இது ஈழத்துப் புகழ்பெற்ற பாடகர் சாந்தன் பாடிய அருமையான பாடல். சாந்தனின் தொடக்க காலப் பாடல்களிலொன்று. இப்படியான பாடல்கள் சாந்தனுக்குக் கைகூடி வரும். இசையும் நன்றாகவிருக்கிறது. இடையில் பழைய சினிமாப் படப் பாடல்போல ஒரு தோற்றம் வருகிறது. "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" பொதுவான வரிகள்.
தொன்னூறுகளின் தொடக்க காலத்தில் வந்த பாடல்கள் மிக அருமையானவை. இந்தமண் எங்களின் சொந்த மண், நெய்தல் போன்ற இசைநாடாக்கள் வெளிவந்த காலமது. அப்போது வெளிவந்த பாடல்களில் ஒன்றுதான் இப்பாடல்.
மாவீரன் மேஜர் சிட்டுவின் குரலில் அருமையான பாடல். கடலில் எம்மவர் பட்ட துன்பங்களும், கடலில் தமிழர்படை பெற்ற வெற்றிக் களிப்பும் இப்பாடலில் வருகிறது.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களிவை.
நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று -வான் மீதுநிலா பால்சொரியும் நேரம் வலையேற்று ஈழக்கடல்மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலை ஏறிவந்து கொன்றபகை இன்று தொலைந்தாச்சு
வலையை வீசடா -கடல் அழகைப் பாரடா -கடல் புலிகள் தந்த வாழ்க்கையென்று வாழ்த்துப் பாடடா
காலை விடிகின்றவரையும் நீரில் மிதக்கின்றோம் காற்றுடனே போர்தொடுத்து ஊர் திரும்புகின்றோம் நாங்கள் கரையேறுமட்டும் பார்த்திருப்பார் பெண்கள் வேங்கைகளை நம்பியிங்கு தூங்குதவர் கண்கள்
இந்த ஊரறியாதெங்கள் வேதனை -நாங்கள் உண்பதுக்கெத்தனை சோதனை... சோதனை
பாய்விரித்து ஓர்இரவு மீன்பிடித்தான் பிள்ளை பத்துமாதம் போனதையா ஏன் திரும்பவில்லை சிங்களத்துப் பேய்களினால் பிள்ளையுயிர் போச்சு சந்ததிக்கு வாய்த்த உடல் மீனுக்கிரையாச்சு
இது சோகங்கள் தாங்கிய தேகங்கள் -இன்று சொந்தங்கள் வந்தால் சந்தோசங்கள்
அச்சமின்றி கடலில் ஏறி வாழ வைத்த புலிகள் ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள் பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள் போரில்வெற்றி காணவேண்டும் நாளை இந்தஉலகில்
நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள் -பிர பாகரன் காலத்தைப் பாடுங்கள்... பாடுங்கள்
புகழ் பெற்ற ஈழத்துப் பாடகர் சாந்தன் பாடிய பாடல். இவ்வகையான பாடல்களுக்கு சாந்தனின் குரல் அருமையாக ஒத்துவருகிறது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் வந்த பாடல்கள் வரிசையில் முக்கியமான பாடல். பாடல் வரிகள் யாரென்று சரியாகத தெரியவில்லை. வரிகளை வைத்துப் பார்க்கும்போது பண்டிகர் பரந்தாமன் அல்லது பஞ்சாட்சரமாக இருக்கலாம்.
எளிமையான இசை அருமையாக உள்ளது.
இப்போது தான் பார்த்தேன். பாடல் இணைப்பு வேலை செய்யவில்லை. சரிப்படுத்துவரை கீழ்க்காணும் இணைப்பிற் சொடுக்கிப் பாடலைக் கேளுங்கள்.
இது வர்ண.இராமேஸ்வரன் பாடிய பாடல். கரும்புலிகள் இசைநாடாவில் இடம்பெற்ற பாடல்.
தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான் சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும் புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா
நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள் நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன் நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன் சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ் தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்
நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன் நீளவிழி மைகரைய நீ கலங்கினாய் ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டிநிற்கிறான் -எந்தன் அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய் உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.
அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும் அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப் போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில் மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு
இது புலத்தில் வாழும் தமிழர் பலரின் ஏக்கத்தைச் சொல்லும் பாடல். வெளிவந்த நேரம் மட்டுமன்றி எப்போதுமே இப்பாடலுக்கென்று தனியே மரியாதையுண்டு.
தேனிசை செல்லப்பாவின் குரலில் (காசி ஆனந்தன் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இவர்தான் குரல் கொடுத்துள்ளார்) அருமையாக வந்துள்ளது பாடல். மிக இலகுவான மெட்டு.
____________________________________ ஒரு செயலி செயற்படாவிட்டால் மற்றதை முயலவும்.
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.
சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயிர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய் கதற பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் காயாகும் முன்னே இளம் பிஞ்சுகளை அழிக்கிறான்.
பெத்தவங்க ஊரில ஏங்குறாங்க பாசத்தில எத்தனை நாள் காத்திருப்போம் அடுத்தவன் தேசத்தில உண்ணவும் முடியுதில்லை உறங்கவும் முடியுதில்லை எண்ணவும் முடியுதில்லை இன்னுந்தான் விடியுதில்லை
கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் விளையாடும் தெருவில கட்டிவச்சுச் சுடுகிறானாம் யார் மனசும் உருகல ஊர்க்கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது போர்ப்புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது